web log free
April 30, 2025
kumar

kumar

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நாட்களில் பாடசாலைகள் மற்றும் வீதிகள் முன்பாக விசேட பாதுகாப்பை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் வேனில் வந்த சிலர் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு உணவு வகைகளை வழங்கி அவர்களை கடத்திச் செல்ல முற்பட்ட போது இரு பிள்ளைகள் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து அலறியடித்துள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மன்னார் பொலிஸாருக்கும் பாடசாலைக்கும் அறிவித்ததையடுத்து மன்னார் மாவட்ட அலுவலகம், பாடசாலை அதிபர்கள், மன்னார் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து கலந்துரையாடி விசேட பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இதன்படி, மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாகவும், வீதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள அதேவேளை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர்களை வீதியில் தனியாக நடமாட வேண்டாம், குழுவாக நடமாடுமாறு அறிவித்துள்ளனர்.

மேலும், வீட்டிலிருந்து பாடசாலைக்கு வரும்போது, ​​குழுவோடு வரவோ அல்லது வீட்டில் பெரியவர்களுடன் வரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்களை கடத்த முற்பட்டவர்கள் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் நாட்டிற்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த வருகை அமைகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் காரசாரமான விவாதம் காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்துவது சட்டவிரோதமானது என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உரிய விவாதம் நடத்தப்படுமா? இல்லை? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு அதிகாரியொருவரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகேவிடம் வினவிய போது, நேர அட்டவணையின் பிரகாரம் இன்று(10) ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என கூறினார்.

எனினும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று(10) காலை 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மார்க்கத்தில் ஒரு ரயில் சேவையும் களனிவௌி மார்க்கத்தின் 02 ரயில் சேவைகளும் குருணாகல் மற்றும் மொறட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 ரயில் சேவைகளும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பு - பதுளை இடையிலான உடரட்ட மெனிக்கே ரயில் சேவையையும் இன்று(10) இரத்து செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி ட்ரோன் கமராவை பறக்கவிட்ட சீன பிரஜைகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சீன பிரஜைகள் இருவரும் இன்று (08) காலை ட்ரோன் கமராவை பறக்கவிட முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ட்ரோன் கமராவை கண்டி தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ தலதா மாளிகையோ அல்லது அது தொடர்பான பாதுகாக்கப்பட்ட வலயமோ காணப்படாததால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில், இருவரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரின் சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை மோதிவிட்டு ஓடிய ஜீப் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறு காயங்களுக்குள்ளான அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். சந்தேக நபர் 18 வயதுடையவர்.

கடந்த 5ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் அதிவேகமாக சொகுசு ஜீப்பில் வந்த சந்தேக நபர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் எதிர்புறம் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்கள் மீது மோதியுள்ளார்.

இது அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

வீதியில் நிர்மாணப் பணிக்காக வெட்டப்பட்ட பள்ளத்தை தவிர்ப்பதற்காக காரை வலது பக்கமாக திருப்பிய போது வலது பக்கம் இருந்த இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த போது நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் யாரும் இருக்கவில்லை என்றும் பொலீசார் கூறுகின்றனர்.

விபத்துக்குள்ளான ஜீப்பில் அமைச்சரின் மகன் உட்பட 3 பேர் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அமைச்சரின் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்கள் இன்று (09) முதல் பணிக்கு சமூகமளிக்க முடியும்.

அவர் பணியாற்றிய இடம் தனது தொகுதியாக இருந்தால் அந்த இடத்தில் பணிபுரிய முடியாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்தார்.

இன்று (09) பணிக்கு சமூகமளிக்குமாறும், தனது நிறுவன தலைவர் ஊடாக வேறு தொகுதிக்கு இடமாற்றம் பெற்றுக் கொள்ளுமாறும் செயலாளர் தெரிவித்தார்.

அந்த ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு வேறு தொகுதிக்கு இடமாற்றம் பெறுவது கட்டாயம் என செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் இந்த நிலையில் இரத்து செய்யப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.

மறுதேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக தமது பணிகளை விட்டுவிட்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்து கொள்வது அல்லது பதவிகளை ஏற்காமல் இருப்பது மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற விசேட யோசனைக்கு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவினால் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்வரும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு விசேட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனநாயகத்தை மீறும் அடக்குமுறை அரசில் இணையக் கூடாது, பதவிகளைப் பெறக்கூடாது என செயற்குழுவில் முதல் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மக்கள் பெயரால் இப்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்றும், அப்படிச் செய்யக் கூடாது என்றும், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டுக்கு ஆதரவான முற்போக்கு செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற மற்றுமொரு பிரேரணைக்கு செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஒரு பரந்த கூட்டணியை கட்டியெழுப்பவும், அந்தக் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு முழு அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கட்சித் தலைவர் என்ற முறையில் ஒப்படைப்பதற்கும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் யாப்புக்கு அமைய கட்சியின் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரம் வழங்கவும் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் கோதுமை மா மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினாலும் ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

உலக சந்தையில் வெள்ளை சீனியின் விலை மெட்ரிக் தொன் ஒன்றின் விலை 500 டொலர்களில் இருந்து 750 டொலர்களாக அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த தினம் இலண்டன் சென்றிருந்த நிலையில் இன்று காலை ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd