web log free
April 27, 2025
kumar

kumar

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா.

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும். இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும். அதன்பின் நீடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக கொழும்பு கோட்டையில் இன்று(23) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம், அகில இலங்கை பொது கடற்றொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட பல மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து, சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

நாடு முழுவதும் இன்றைய தினம் நான்கரை மணித்தியால மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

3 வலயங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும், ஏனைய வலயங்களுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

இன்றைய தினம் 7 மணித்தியால மின்சார தடையை ஏற்படுத்த அனுமதி வழங்குமாறு, இலங்கை மின்சார சபை தம்மிடம் கோரியதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

எனினும், மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைத்தமையினால், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலையீட்டில், அந்த கால எல்லை குறைக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

700 மெகா வோர்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்உற்பத்தி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, இன்றைய தினம் காலை 8:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

கொடதெனியாவ வனாத்தமுல்ல பிரதேசத்தில் அல்கொய்தா எனப்படும் கும்பலால் மக்கள் துன்புறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் பீதியடைந்துள்ளது.

இதனால் அச்சம் காரணமாக அப்பகுதி மக்கள் மாலை வீடுகளின் கதவு, ஜன்னல்களை பூட்ட நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த 15ம் திகதி, மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுமிகளைக் கொல்ல முயன்ற குண்டர் கும்பல், அதைத் தடுக்க வந்த வயதான தம்பதியினரைத் தாக்கியது கிராம மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது.

அதன் பின்னரே அப்பகுதி மக்கள் இதனை உடனடியாக நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர்.

எவ்வாறாயினும், அல்கொய்தாவுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அல்கொய்தா உறுப்பினர்களை கைது செய்தமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கொடதெனியவில் இடம்பெற்றது.

இதில் பிரதேச மகா சங்கத்தினர், சமூக பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை லலிதாவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெனியாய − விஹாரஹேன பகுதியில் இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விஹாரஹேன − அடாரதெனிய பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகளுக்காக, வீதியின் இரு புறத்திலும் உள்ள மண்மேடுகளை வெட்டிய போது, அடாரதெனிய முச்சந்தியில் இந்த சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரண்டு சுரங்கப் பாதைகளும் ஒரே இடத்தில் ஆரம்பமாகும் அதேவேளை, சுரங்கப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் வீடுகள் கிடையாது என தெரிய வருகின்றது.

எனினும், சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதைகள் எந்த காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது? அவ்வாறு இல்லை என்றால் இயற்கையாகவே உருவானதா? என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, இந்த சுரங்கப் பாதை குறித்து ஆய்வுகளை நடத்த இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என அந்த பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

வௌிநாடுகளுக்கு செல்வோருக்காக போலியாக PCR அறிக்கைகளை தயாரித்த மூவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32, 33 மற்றும் 28 வயதான மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வைத்தியசாலையொன்றின் பெயரைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் போலியாக PCR அறிக்கைகளை தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

டொலர் நெருக்கடி உருவாகுவதற்கு முன்னர் இலங்கைபெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் மூன்று வாரங்களிற்கான எரிபொருள் கையிருப்பு இருப்பது வழமை ஆனால் தற்போது ஐந்து அல்லது ஆறு நாட்களிற்கே எரிபொருளை சேமிக்க முடிகின்றது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாப அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த ஊகங்கள்காணப்பட்டன ஆனால் மத்திய வங்கி உட்பட ஏனைய வங்கிகளின் உதவியுடன் நாங்கள் இதுவரை வந்துள்ளோம் ஆனால் தற்போது தீர்க்கமான கட்டத்தில் உள்ளோம் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கேடி ஒல்கா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிற்சாலைகள் மற்றும் போன்றவற்றிற்கான நாளாந்த தேவை 6000 மெட்ரிக் தொன் ஆனால் தற்போது இது 9000 தொன்னாக அதிகரித்துள்ளது.

மின்சக்திதுறைக்கே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

மேமாதம் வரையிலான வரட்சிக்காலங்களில் நீரை சேமிக்க முயல்கின்றோம்,

ஆறுமாதங்களிற்கு முன்னர் 15 முதல் 21 நாட்களிற்கு எரிபொருளை சேமிக்கும் நிலையிலிருந்தோம்,நுரைச்சோலைமின்நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதும் எரிபொருளை சேமிக்க முடியாத நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது ஐந்து ஆறுநாட்களிற்காக சேமிப்பே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

88 இணைப்புகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியப் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அறிக்கை இன்று நாடாளுமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக இது கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டவளை ரொசல்ல - ஹைட்ரி விகாரையின் பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20ஆம் திகதி விகாரைக்கு சென்ற மாணவனுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவனின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd