மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என மின்சார சபை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
அவர்களில் கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சக்திவாய்ந்த அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சரின் வீட்டுக்கு மட்டும் சுமார் 12 மில்லியன் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமல் இருப்பதாக ஜெயலால் வெளிப்படுத்தினார்.
ஆகையால், சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சரின் வீட்டிற்கு மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கிருலப்பனை மின்சார சபை அலுவலகத்தின் உள்ளுர் மின் பொறியியலாளர்கள் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் சம்பந்தப்பட்ட அமைச்சரின் வீட்டிற்குச் சென்றதாகவும் ஆனால் அவர்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் தனது பாதுகாப்புப் தரப்பினரை வைத்து மின் மீட்டரை அணுக பொறியாளர்களை அனுமதிக்க மாட்டார் என்றும் ஜெயலால் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருந்து தனித்து செயல்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஏசியன் மிரருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
"உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தலில் தனித்தனியாகக் கேட்கத் தயாராகுங்கள்." என் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி பதுளை சைமன் பீரிஸ் ஞாபகார்த்த மண்டபத்தை அண்டியுள்ள அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் பதுளை தொகுதியின் பிரதேச அமைப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளதாக ஏசியன் மிரருக்கு செய்தி வந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி பதுளைக்கு வருவதற்கு தயாராகும் வகையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
“மொட்டுடன் கைகோர்த்து வாக்கு கேட்டாலும் நாங்கள் எதிர்பார்க்கும் வேட்புமனு கிடைக்காது. எனவே தனித்து கேட்க தயாராக வேண்டும். எங்கள் கட்சிக்கு தனித்து கேட்பது கடினம். . ஆனால் நாம் அதை செய்ய வேண்டும். அதற்கு இப்போதே தயாராகுங்கள்." என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“மொட்டுக்கு இப்போது மக்கள் அலுத்துவிட்டனர். என அமைச்சர் கூறியதாக ஏசியன் மிரருக்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட வினாத்தாள் விநியோகம் மற்றும் நேரக் கணிப்பீடு என்பன புதிய தொழில்நுட்ப முறையின் கீழ் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வலய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேற்பார்வை நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.
நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுவதாகவும் அதனால் பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இன்று ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், எதிர்காலத்தில் அதனை 200, 300 ரூபாவுக்குக் கூட வாங்க முடியாது.
எனவே கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (18) முதல் நாளொன்றுக்கு இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு இருக்காது என அறிவித்த ஆணைக்குழுவின் தலைவர் தானே அறிவித்து சில மணித்தியாலங்களில் இவ்வாறு தெரிவித்தார்.
மின்வெட்டு இரண்டு கட்டங்களாக இருக்கும். முதல் கட்டம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.
அப்போது ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்.
இரண்டாம் கட்டம் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும்.
அக்காலப்பகுதியில் 45 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின்வெட்டு அமுலில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹேமசிறி பெர்ணான்டோ மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து, அவரை விடுவித்து விடுதலையாக்க விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
இதில் 34 வயதுடைய பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார் என தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவே என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
அவர் பாவம் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை அவரால் பொறுக்க முடியாமல் அவர் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஏன் போராடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
மக்களுடைய பிரதிநிதிகளாக நாங்கள் மக்களுடன் சேர்ந்துதான் போராடினோமே தவிர நாங்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கவில்லை. இது முற்றுமுழுதாக மக்களுடைய போராட்டங்களாக நடந்தது.
நாங்கள் மக்களுடன் கூட நின்றோம். தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் இவர். அவர் இன்றைக்கு இப்படி சொல்லுவார், நாளை வேறொன்றை சொல்லுவார், அவற்றை எல்லாம் முக்கிய விடயமாக எடுத்து கொள்ள கூடாது என தெரிவித்தார்.
விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு ரூ. 42 கோடியை மாற்ற சென்ற போது இலங்கை பெண் விமான நிலையத்தில் சிக்கியதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை நாட்டை சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ(40) என்பவர் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளியாக இருந்த ஒரு இந்தியர், 3 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணா நகரில் தங்கி அந்த முகவரியை வைத்து ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு, இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது.
தடைச்செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால் டெல்லி என்ஐஏவுக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் நடத்திய விசாரணையில், போலி இந்திய பாஸ்போர்ட் மற்றும் பிற போலி ஆவணங்களுடன் பெங்களுரு வழியாக மும்பைக்கு இலங்கை பெண் செல்ல இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வங்கி கணக்கு ஒன்று மும்பையில் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்கில் இருந்து 42 கோடி ரூபாய் பணத்தை விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு தொடர்புடைய வங்கி கணக்கிற்கு மாற்ற சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மும்பையில் உள்ள வங்கி கணக்கு செயலிழந்து உள்ளதாக கூட்டாளிகள் தெரிவித்ததால், வங்கி கணக்கை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்காக வங்கி கணக்கு வைத்திருந்த நபரின் பெயரில் போலியாக சிம் பெற்று மாற்ற முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் வங்கி கணக்கு வைத்திருப்போரின் வாரிசு போல போலி ஆவணங்களை தயார் செய்து பணத்தை எடுக்க, மும்பைக்கு சென்ற போது இலங்கை பெண் பிடிப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கியில் இருந்த பணத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தினரின் ஆதவாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்ற திட்டம் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மும்பையில் யார் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது எனவும், உலகம் முழுவதும் பரவி கிடக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்த தகவலை பெற என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் கலைகட்டியுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் களத்தில் இறங்கி கலக்கி வருகின்றனர். அதில் குஷ்பு, உதயநிதி, கமல், சீமான் போன்றவர்கள் முன்னிலை பெறுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தமது அணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கினார்.
ஒரு பகுதியில் விஜய் பிரச்சார இடத்தில் வடை சுடுவதையும் வேட்பாளர் போஸ்டருடன் நிற்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.