முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட லண்டன் பயணத்தின்போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணைக் கோப்புகள் சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சட்ட மாஅதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.




