தற்போதைய சூழ்நிலையில் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவியை ஏற்க தனக்கு எந்தவிதமான சட்டரீதியான வாய்ப்பும் இல்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிட்ட பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில்,
“இந்த நேரத்தில் எந்தவொரு அமைச்சர் பதவியையோ அல்லது பிரதி அமைச்சர் பதவியையோ ஏற்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டரீதியான வாய்ப்பு இல்லை.
எனவே, அமைச்சர் பதவியை ஏற்குமாறு என்னிடம் கோரிக்கை விடுப்பதோ அல்லது எனக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதோ எந்தப் பயனும் அளிக்காது.” என தெரிவித்துள்ளார்.




