Homeஉள்நாட்டு செய்திகுற்றவாளிகள் கைது செய்யப்படும்போது சில அரசியல்வாதிகளுக்கு நடுக்கம்

குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது சில அரசியல்வாதிகளுக்கு நடுக்கம்

spot_img

குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும், அரசியல் தளத்தில் உள்ள செல்வாக்கு மிக்க “காட்ஃபாதர்கள்” மீது வழக்குகள் தொடரப்படுவதும் நடைபெறும்போது, அவர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்து வருவதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“இலங்கையில் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை கடந்த ஒரு ஆண்டாக தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய அளவிலான குற்றவாளிகள் இதில் சிக்கியுள்ளனர். முன்னாள் நீதியமைச்சர்கள் கூட, அவர்களின் மகன்களும் பாரிய அளவிலான பாதாள உலக போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களாக தற்போது வெளிப்பட்டு வருகின்றனர்.

அதனால், இந்த குற்றவியல் வலையமைப்புக்கு எதிராக அரசாங்கம் கடந்த ஒரு ஆண்டாக மிகுந்த முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படும்போதும், அரசியல் தளத்தில் உள்ள அந்த ‘காட்ஃபாதர்கள்’ மீது வழக்குகள் தொடரப்படும்போதும், அவர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்து செயல்படுவதை நாம் காண்கிறோம்.

இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இனவாதிகள், திருடர்கள், மோசடிக்காரர்கள், கொள்ளையர்கள் என யாராக இருந்தாலும் ஒன்றிணைய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this