இதய நோய்கள், நீரிழிவு போன்றவற்றுடன் சேர்ந்து தோல் நோய்களும் தற்போது ஒரு தீவிரமான சுகாதாரப் பிரச்சினையாக மாறிவருகின்றன என்று தோல் நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தோல் நோய்களுக்காக சிகிச்சை பெற மருத்துவமனை கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தோல் நோய் நிபுணர் மருத்துவர் நயனீ மதரசிங்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.




