Homeவிளையாட்டு செய்திஅர்ஜென்டினா - ஸ்பெயின் இறுதிப் போட்டியில் மோதல்

அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப் போட்டியில் மோதல்

spot_img

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. 

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முதல் பாதியில் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் போட்டியின் நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம், தோல்வியடைந்த இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை சந்திக்கிறது. 

உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றும் இலக்குடன் அர்ஜென்டினா களமிறங்கவுள்ள நிலையில், இறுதிப்போட்டி கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

Latest articles

சீருடை விவகாரத்தைப் வைத்து நாட்டை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

சீருடை விவகாரத்தைப் பயன்படுத்தி நாசகாரச் செயல்களிலும் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் பல்வேறு நபர்களுக்கு எதிராகக்...

இனி காவி உடை அணிய மாட்டேன்! அடம்பிடிக்கும் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக இதற்கு முன்னரும் சிறைத்தண்டனை பெற்றிருந்தபோதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக்குள்ளோ அல்லது வெளியிலோ தனது காவி...

நாடு முழுக்க மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத்...

இசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள...

More like this

தங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே...

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா...

சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஸ்பெயின்!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்,...