2026ஆம் ஆண்டிற்கான தேசியப் பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் http://nstt.moe.gov.lk இணையதளத்தின் ஊடாக ஆன்லைனில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, தகுதி பெற்ற தேசியப் பாடசாலை ஆசிரியர்கள் ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை ஆன்லைன் முறையின் மூலம் இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், அதன் அச்சுப் பிரதியை ஜூலை 31 அல்லது அதற்கு முன்னர், தாம் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆசிரியர்கள் நேரடியாகக் கொண்டு வரும் அல்லது தபால் மூலம் அமைச்சுக்கு நேரடியாக அனுப்பப்படும் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், அனைத்து விண்ணப்பங்களும் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரின் அனுமதியுடன் அனுப்பப்பட வேண்டும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



