Homeவணிக செய்திஉலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

உலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

spot_img

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக, உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிபொருள் விலைகளையும் திருத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய உலக சந்தை நிலவரப்படி, பிரென்ட் (Brent) கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 85 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 80 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, மத்திய கிழக்கு நெருக்கடியால் இதற்கு முன்னரும் இலங்கை பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதே நிலைமை மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதால், அது மக்கள் விரும்பாத தீர்மானமாக இருந்தாலும், உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளைச் சீரமைப்பதே பொருத்தமான நடவடிக்கையாகும் என அவர் வலியுறுத்தினார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மேலும் சவாலாக அமையக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

spot_img

Latest articles

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத்...

சமூக ஊடகங்களில் போலித் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

– பொலிஸார் எச்சரிக்கை சமூக ஊடகங்கள் ஊடாகப் பொய்யான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதுடன்...

கைதி பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது காவி உடை அணிய அனுமதி!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பௌத்த பிக்குகள், சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு அனுமதிக்க...

அனோஜனின் மரண தண்டனை இரத்து

இலங்கையர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கைப் பிரதி...

More like this

வியட்நாம் ஏர்லைன்ஸ் கொழும்பு – ஹோ சி மின் நகருக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது

வியட்நாம் ஏர்லைன்ஸ் எதிர்வரும் 16ஆம் திகதி இரவு முதல், ஹோ சி மின் நகருக்கும் கொழும்புக்கும் இடையில் புதிய...

ஸ்கோலியோசிஸ் அறுவைச் சிகிச்சை முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை நோயாளிகளுக்கான உதவி 

ஊடக அறிக்கை  கொழும்பு – இந்தியாவின் Baby Memorial Hospital (BMH) மருத்துவர்கள், நேரடி நரம்பு கண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை வழிகாட்டி...

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

-ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY' இலங்கைச் சந்தையில் அறிமுகம் இலங்கையின் முன்னணி...