Homeஉலக செய்திஉக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் - இந்தியா கடும் கண்யா

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் – இந்தியா கடும் கண்யா

spot_img

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இதற்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அது முதல் இதுநாள் வரையில் ஏவுகணைகள், ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சூழலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை நேற்று திங்கள் கிழமை வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது:

ஜூலை 19, 2026 அன்று உக்ரைனின் ஒடேசா நகரில் இருந்து புறப்பட்ட ‘எம்.வி கோல்டன் லியோ’ என்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த கப்பலில் 17 மாலுமிகள் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள்.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரத்தை கவனத்துடன் கையாண்டு வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர் விரைந்து குணமடைய வேண்டும்.

இந்த வகையான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. சரக்கு கப்பல் மற்றும் அதில் பயணிக்கும் மாலுமிகள் மீதான இந்த வகை தாக்குதல் வருந்ததக்கது. இது கப்பல் போக்குவரத்தை தடைசெய்யும் வகையிலான தாக்குதலாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடை கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான்...

திருமண விளம்பரங்களில் சாதியை குறிப்பிடும் பகுதியை நீக்க நடவடிக்கை

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த புதிய பொறிமுறை அவசியம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மூடநம்பிக்கைகளைப் பரப்பும்...

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம்...

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டம் அறிவிப்பு

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள், அத்துடன் சீலமாதாக்கள்...

More like this

ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் கப்பல் விபத்து

இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

நேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் 'ரசுவா' (Rasuwa) மாவட்டத்தில்...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...