-அப்படிச் செய்தாலும் கட்சிப் பணிகள் தடைப்படாது – நாமல் ராஜபக்ஷ
தம்மை சிறையில் அடைப்பது எளிதான காரியமல்ல என்றும், ஏதேனும் காரணத்தால் அது நடந்தாலும், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் எந்தத் தடையும் இன்றி தொடரும் வகையில் தேவையான அனைத்து திட்டங்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், மொட்டு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட பயிற்சி செயலமர்வில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், எந்தவொரு சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், கட்சி கிராம மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:
“என்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதல்ல. அடைத்தாலும் எங்களுக்கு பிரச்சினையில்லை. கிளைச் சங்கங்களையும் அதிகார மன்றங்களையும் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கான தெளிவான திட்டத்தை ஏற்கனவே தயாரித்துள்ளோம். கிராம மட்டத்தில் பிரிவு ரீதியான பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும், தொகுதி அதிகார மன்றங்களை எவ்வாறு கூட்ட வேண்டும், மாவட்டக் கூட்டங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான முழுமையான செயல் திட்டமும் தயாராக உள்ளது.”




