Homeஉள்நாட்டு செய்திசிறைச்சாலைகளை மூடக்கூடிய தலைமுறையை உருவாக்க வேண்டும் – டில்வின் சில்வா

சிறைச்சாலைகளை மூடக்கூடிய தலைமுறையை உருவாக்க வேண்டும் – டில்வின் சில்வா

spot_img

நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் தற்போதைய சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நல்லதொரு எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளை மூடக்கூடிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றும், புதிதாக சிறைச்சாலைகளை கட்ட வேண்டிய நிலையை ஏற்படுத்தும் தலைமுறையாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கூறியதாவது:

“இந்த நாட்களில் சிறைச்சாலைகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஒரு பிரச்சினையாக உள்ளது. அதேபோன்று சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதும் ஒரு பிரச்சினையாகும்.

எனவே, இந்த நிலைமை அதிகரிப்பது தனிப்பட்ட நபர்களின் தவறுகளால் மட்டுமல்ல. சமூகத்திற்குள் காணப்படும் ஒரு பெரிய பிரச்சினையும் இதற்குப் பின்னணியில் உள்ளது.

மக்கள் குற்றச் செயல்களில் அதிகளவில் ஈடுபடும் நிலையை மாற்ற வேண்டும். அதற்காக எமது பிள்ளைகளை குற்றச் செயல்களின் பக்கம் அல்லாமல், நாட்டை கட்டியெழுப்பும் நல்ல பாதையை நோக்கி வழிநடத்த வேண்டும்.

இதற்கு கல்வி மிகவும் முக்கியமானதாகும். அதேபோன்று பிள்ளைகள் தலைமைத்துவத்தை தமது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”

spot_img

Latest articles

எல் நினோ தாக்கத்தால் மீன் வளம் குறைவு

– மீன்வள பிரதி அமைச்சர் எல் நினோ நிலைமையின் காரணமாக கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், இலங்கையைச் சூழவுள்ள...

சட்டரீதியான தடைகளை நீக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்

– அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ விரும்பிய மாத்திரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது எனவும்,...

நாட்டில் கடும் காணி பற்றாக்குறை!

தற்போது நாட்டில் கடும் காணி பற்றாக்குறை நிலவி வருகின்ற போதிலும், விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்கு சொந்தமான 12,000 ஏக்கர்...

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த...

More like this