Homeஉள்நாட்டு செய்திஎல் நினோ காரணமாக இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் அபாயம் – ஐ.நா.

எல் நினோ காரணமாக இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் அபாயம் – ஐ.நா.

spot_img

புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையைப் பொறுத்தவரையில் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறே காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கு, நீரில் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஆசிய பிராந்திய நாடுகளில் எல் நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டபோதே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளுக்கு மழைவீழ்ச்சி கிடைக்கும் எனவும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதன் காரணமாக, சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலநிலை தொடர்பான அபாயங்களுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கமும் இணையும் நிலையில், இலங்கையின் பொருளாதார அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த அபாயங்கள் இன்னும் பரந்தளவிலான தாக்கமாக மாறாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முக்கியமான வாய்ப்பு இன்னும் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

Latest articles

QR முறை தொடரும்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையானது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதா, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது...

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது!

– அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொதுஜன பெரமுனவின்...

பாரிய முறைகேட்டை மூடிமறைக்க ஜனாதிபதி செயலாளர் முயற்சி

சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேட்டை மூடிமறைக்க தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி....

More like this