மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இன்று (செப்டம்பர் 7) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தமிழ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




