பொதுவாக, ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓரிரண்டு ஆண்டுகள் கடந்தவுடன், அந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த ஒருவரைக் கூட கிராமத்தில் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
மக்கள் தாங்கள் அந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்று கூறத் தொடங்குவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் போது, மக்கள் தாங்களே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்ததாகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தாங்கள் நிற்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வாக்களிக்காத கிராம மக்கள் அது குறித்து வருத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




