கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு கிடைத்த மக்கள் ஆணை இன்னும் தொடர்கிறது என நம்பினால், அவர் உறுதியளித்தபடி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், சந்திக்கு சந்தி மக்கள் சந்திப்புகளை நடத்தி பெருமை பேசுவதால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
1970 ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ரோஹண விஜேவீர கூட இதேபோன்று கட்சி ஆதரவாளர்களை ஒன்றுகூட்டி கைதட்டச் செய்ததை தான் அறிந்திருப்பதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திஸாநாயக்க 3 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தபோதுகூட, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு காலிமுகத்திடலில் சுமார் 60,000 பேரை ஒன்றுகூட்டி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெரண 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.




