எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எரிபொருள் மானியத் திட்டத்திற்காக ரூ.4,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.
கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.




