கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், சுமார் 8 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இலங்கை வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமானிலிருந்து இலங்கைக்கு வந்த குறித்த நபரிடமிருந்து சுமார் 4 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய இலங்கை வர்த்தகர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




