Homeஉள்நாட்டு செய்திஇலங்கை வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி தரமற்ற நிலக்கரி இறக்குமதியே!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி தரமற்ற நிலக்கரி இறக்குமதியே!

spot_img

– பாட்டளி சம்பிக்க ரணவக்க

இலங்கைக்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மொத்த நிதி இழப்பு சுமார் 18 பில்லியன் ரூபாய் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தின் எரிசக்தித் துறை தொடர்பான குழுவிடம் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்த விவகாரத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், தற்போது அமைச்சின் அறிக்கையிலேயே அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற நிலக்கரியை அதிகளவில் எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மாத்திரம் சுமார் 7 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், சாம்பலை அகற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சுமார் 80 மில்லியன் ரூபாய் நட்டமும், பராமரிப்புப் பணிகளுக்காக மேலும் 13 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன.

மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், தொடர்ச்சியான மின்சார விநியோகத்தைப் பேணுவதற்காக மாற்று வெளி மூலங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக 8.572 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, அந்த இழப்பு மாத்திரம் 15.7 பில்லியன் ரூபாயாகும்.

இதற்கு மேலதிகமாக, நிலக்கரிக் கப்பல்கள் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேலும் 2.284 பில்லியன் ரூபாய் நட்டம் பதிவாகியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான முழுச் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மொத்த நிதி இழப்பு 17.965 பில்லியன் ரூபாய் எனவும், இது ஏறத்தாழ 18 பில்லியன் ரூபாயாகும் எனவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

சமூக ஊடக வதந்திகளை நம்பி எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம்

– எரிசக்தி அமைச்சர் சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களுக்கு அஞ்சி, தேவையற்ற வகையில் எரிபொருளைக்...

ஜனாதிபதியின் மனைவி, மகன் என்பதைக் கூறி திருடுவதற்கு உரிமம் பெற்றுவிட முடியாது

– ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதேச சபைத் தலைவர் பதவி முதல் ஜனாதிபதியின் மனைவி மற்றும் மகன்...

அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்! பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள்..!

சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய...

இறுதிக் காலாண்டில் திட்டமிட்ட மின்வெட்டு?

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்) நீர்மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய முறைமை இயக்குநர்...

More like this