Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் செயற்பாட்டில்

இலங்கையில் 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் செயற்பாட்டில்

spot_img

இலங்கையில் இதுவரை 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 48 கும்பல்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக, அண்மையில் மஹரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது, போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகும் அபாயத்தை எதிர்கொள்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளைப் பெற்றுக்கொடுப்பது, அத்துடன் சமூகத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பது ஆகிய நோக்கங்களுடன், அதிக ஆபத்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்ட நடமாடும் நிகழ்ச்சித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு நிகழ்ச்சி அண்மையில் மஹரகம, பிரகதிபுர கிராம அலுவலர் பிரிவை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

‘நாடு ஒன்றிணைந்து’ தேசிய போதைப்பொருள் தடுப்புத் திட்டத்தின் கீழ், அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டு தேசிய சபையினால் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான சரியான விஞ்ஞான அறிவை மக்களுக்கு வழங்குதல், மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி பெறுவதற்கான 1927 என்ற அவசர தொலைபேசி சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுதல் ஆகியவையும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் குறித்து பிரதி அமைச்சர் தெரிவிப்பு

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்ததாவது:

“இலங்கையில் 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக நாம் சிவப்பு அறிவித்தல்களைப் பிறப்பித்துள்ளோம்.

மேலும் 48 கும்பல்கள் செயலற்ற நிலையில் உள்ளன. அவர்கள் அவ்வப்போது மீண்டும் செயற்படத் தொடங்கி, பின்னர் அமைதியாகிவிடுகின்றனர்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி, பெருமளவில் கப்பம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுவதை நாம் அறிவோம்.

இந்தக் கப்பம் பெறும் நடவடிக்கைகளையும் கருத்திற்கொண்டு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் உரிய சட்டக் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

spot_img

Latest articles

இலங்கையில் நாய்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் நாய்களின் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சர் ஒருவரும் பிரதி அமைச்சர் ஒருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கொன்று முரணான புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளமை...

நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற காரணத்தை வெளியிட்ட கஸ்ஸப தேரர்

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே தாம்...

விஹாரமஹாதேவி பூங்கா சத்தியாக்கிரகத்தை நிறுத்த யாராலும் முடியாது

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்தி அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக...

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்து அச்சம்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஒருவித...

More like this