Homeஉள்நாட்டு செய்திபொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை இல்லை

பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை இல்லை

spot_img

பொலிஸ் நிலையங்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறு கொண்டு செல்லப்படும் தொலைபேசிகள் பொலிஸ் நிலையங்களுக்குள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் சிலர், அங்குள்ள தடுப்புக் காவல் அறைகளை காணொளியாகப் பதிவு செய்வதாகவும், பொலிஸ் நிலையங்களுக்குள் இடம்பெறும் உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்திற்கு முரணானவை என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

spot_img

Latest articles

நீர்க்கட்டணங்களில் மாற்றமா?

நீர்க்கட்டணங்களில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல்...

இலங்கையின் பல பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நேற்று (31) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட...

323 கொள்கலன்கள் விவகாரம்: விசாரணை அறிக்கை மாயம்!

கொழும்பு துறைமுகத்தில் எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட...

பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகள் இறக்குமதிச் செலவு 13.4% குறைவு!

பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பயறு வகைகளைச் சேர்ந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 2026ஆம் ஆண்டின்...

More like this