பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பயறு வகைகளைச் சேர்ந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் செலவிடப்பட்ட தொகை 13.4 சதவீதத்தால் குறைந்து 261.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை) குறித்த நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 301.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.
இதன்படி, கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இப்பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 13.4 சதவீதத்தால் குறைந்துள்ளது.
அதேவேளை, 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குறித்த நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 16.7 சதவீதத்தால் குறைந்து 22.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 27.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




