2026 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 1.46 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரால் (NSO) குறித்த காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்க முன்மொழியப்பட்டிருந்தது. எனினும், ஆணைக்குழுவின் ஆரம்பகட்ட மீளாய்வின் பின்னர் அந்த அதிகரிப்பு 1.46 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளை (05) நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக்குப் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள




