இந்தியாவின் தேவைக்கேற்ப இலங்கையின் காணிகளை அபகரிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்திலிருந்து நால்வகைச் சமூகத்தினரையும் வெளியேற்றிவிட்டு, சுற்றுலாத்துறை என்ற பெயரில் போலியான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு, அதன் ஊடாக காணிகளைத் துண்டுகளாகப் பிரித்து விற்பனை செய்தால், மக்கள் நிர்வாண நிலையை அடைவதற்கான வழி தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சங்கத்தினரைப் பாதுகாத்து, அவர்களின் நலன்களைப் பேணுவது நீதிமன்றத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து தமக்கு சந்தேகங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸார் நீதிமன்றத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தம்மை புத்தபெருமானுக்கு அருகிலிருந்து அகற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த பலாங்கொட கஸ்ஸப தேரர், தாம் தற்போது தங்கியிருக்கும் காணிகள் முன்னாள் மன்னர்களால் தானமாக வழங்கப்பட்டவை என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




