Homeஉள்நாட்டு செய்திசதித்திட்டத்தை தோற்கடிக்க உயிரையும் பொருட்படுத்தாது செயற்படுவேன்

சதித்திட்டத்தை தோற்கடிக்க உயிரையும் பொருட்படுத்தாது செயற்படுவேன்

spot_img

அநுராதபுரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஜனாதிபதியின் பாரியார் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக ராஜாங்கனை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பின்னர் தலையில் கட்டுகளுடன் சமூக ஊடகத்தின் ஊடாக வெளியிட்ட விசேட காணொளி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஜனாதிபதியின் பாரியாருக்கு மேலதிகமாக, அமைச்சர் வசந்த சமரசிங்க, நாமல் கருணாரத்ன, வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பல பொலிஸ் அதிகாரிகளும் தன்னைப் பற்றி விசாரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் வைத்தியசாலையில் இருந்தபோது ஜனாதிபதியின் பாரியார் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒரு விடயம் அது. அதேபோன்று அமைச்சர் வசந்த சமரசிங்க, அமைச்சர் நாமல் கருணாரத்ன உள்ளிட்ட பலரும் என்னைப் பற்றி விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் புண்ணியத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது நடத்தப்பட்ட தடிகள் மற்றும் பொல்லுகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், நேரடியாக உயிரைப் பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகவும், ருவன்வெலிசாய மகா தூபியின் ஆசீர்வாதத்தினாலேயே தான் உயிர் பிழைத்ததாகவும் சத்தாரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதன் மூலம் பௌத்த சாசனத்திற்கும் நாட்டிற்கும் அழிவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தான் எந்தவொரு தனிப்பட்ட இலாபத்தையோ அல்லது பணத்தையோ எதிர்பார்த்துச் செயற்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நாட்டையும் பௌத்த சாசனத்தையும் தூய்மைப்படுத்தி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு சதித்திட்டத்தையும் தோற்கடிக்க உயிரையும் பொருட்படுத்தாது செயற்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அநுராதபுரம் பகுதியில் பலாங்கொட கஸ்ஸப தேரர் கலந்துகொண்ட நிகழ்வொன்றுக்கு அருகில் ராஜாங்கனை சத்தாரதன தேரருக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன்போது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த சத்தாரதன தேரர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் வாயிலாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி கவனம் ஈர்த்து வரும் தேரராக ராஜாங்கனை சத்தாரதன தேரர் அறியப்படுகிறார்.

spot_img

Latest articles

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: புதிய சிக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரண்டு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் முறையாகக் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில்...

அனைத்து அரச ஊழியர்களினதும் அடிப்படைச் சம்பளம் கணிசமாக அதிகரிப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அனைத்து அரச சேவைகளையும் உள்ளடக்கும் வகையில் அரச ஊழியர்களின்...

சிவாஜிலிங்கம் இறைவனடி சேர்ந்தார்

தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான தமிழ்த்தேசிய...

முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சுமார் 40,000ஆல் குறைவு

முதலாம் தரத்திற்கு பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பது ஆண்டுதோறும் சுமார் 40,000ஆல் குறைவடைந்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும்...

More like this

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு: புதிய சிக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரண்டு சாட்சிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் முறையாகக் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில்...

அனைத்து அரச ஊழியர்களினதும் அடிப்படைச் சம்பளம் கணிசமாக அதிகரிப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அனைத்து அரச சேவைகளையும் உள்ளடக்கும் வகையில் அரச ஊழியர்களின்...

சிவாஜிலிங்கம் இறைவனடி சேர்ந்தார்

தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான தமிழ்த்தேசிய...