Homeஉள்நாட்டு செய்தி2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக அதிகரிப்பு

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக அதிகரிப்பு

spot_img

– அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவிப்பு

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% ஆக அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், ஏனைய பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி, இலங்கையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4,365 ஆக உள்ள நிலையில், ஏனைய நாடுகளில் அதன் விலைகள் வருமாறு:

  • ஐக்கிய இராச்சியம் – ரூ.16,638
  • அயர்லாந்து – ரூ.11,536
  • பிரான்ஸ் – ரூ.10,652
  • துருக்கி – ரூ.8,340
  • மலேசியா – ரூ.6,414

95 ஒக்டேன் பெட்ரோல் விலைகள்

இலங்கையில் ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூ.490 ஆக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், ஏனைய நாடுகளின் விலைகளையும் ஒப்பிட்டுக் குறிப்பிட்டார்.

  • சிங்கப்பூர் – ரூ.834
  • ஐக்கிய அரபு இராச்சியம் – ரூ.847
  • ஜோர்தான் – ரூ.645
  • ஐக்கிய இராச்சியம் – ரூ.757
  • பிரான்ஸ் – ரூ.755
  • பின்லாந்து – ரூ.844
  • நோர்வே – ரூ.949
  • அவுஸ்திரேலியா – ரூ.525
  • டென்மார்க் – ரூ.600

டீசல் விலைகள்

இலங்கையில் ஒரு லீற்றர் டீசலின் விலை ரூ.397 ஆக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏனைய நாடுகளில் ஒரு லீற்றர் டீசலின் விலைகள்:

  • சிங்கப்பூர் – ரூ.936
  • ஐக்கிய அரபு இராச்சியம் – ரூ.804
  • துருக்கி – ரூ.630
  • ஐக்கிய இராச்சியம் – ரூ.879
  • ஜெர்மனி – ரூ.829
  • டென்மார்க் – ரூ.978

நாடுகளுக்கிடையிலான எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை ஒப்பிட்டுக் காட்டி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

spot_img

Latest articles

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில்

அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில்...

வீரவங்ச மனைவிக்கு சிறை உறுதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று...

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் கைது

அனுராதபுரம் ருவன்வெலி மகாசாயவிற்கு அருகிலுள்ள சத்தியாக்கிரகப் போராட்டத் தளத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுத் தலைமறைவாகியிருந்த...

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்க நடவடிக்கை

– 2027 ஜூலை முதல் மாதாந்தம் ரூ.2,500 இடைக்கால கொடுப்பனவு 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும்...

More like this

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில்

அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில்...

வீரவங்ச மனைவிக்கு சிறை உறுதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று...

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் கைது

அனுராதபுரம் ருவன்வெலி மகாசாயவிற்கு அருகிலுள்ள சத்தியாக்கிரகப் போராட்டத் தளத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுத் தலைமறைவாகியிருந்த...