web log free
August 04, 2025
kumar

kumar

எரிபொருளுக்கான VAT வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படும் என தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

புதிய வரிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 59 ரூபாவினாலும் அதிகரிக்குமென அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோல் 400 ரூபாவிற்கும் அதிகமாகவும், டீசல் ஒரு லீற்றர் கிட்டத்தட்ட 400 ரூபாவிற்கும் விலை நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலையுடன் நான்கு விதமான வரிகள் சேர்க்கப்படவுள்ளதாகவும், ஒரு லீற்றர் எரிபொருளுக்கான வரிகள் 125 ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எரிபொருள் கட்டணத்துடன் நீர் மற்றும் மின்சார கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (12) அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவிக்கின்றன.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அதன் அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்துக்கான குறைந்தபட்ச கொடுப்பனவான 20,000 ரூபாவை கோரி இந்த தொழில் நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவிக்கின்றது.

மேலும், டிசம்பர் 13ம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் சுகயீன விடுப்பு அறிக்கையை முடித்துக் கொள்ள மாட்டோம் என தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

பெறுமதி சேர் வரி சட்டமூலம், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) மாலை 4.50க்கு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு 57 வாக்குகள் மேலதிகமாக அளிக்கப்பட்டன.

பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத்தில் குழு நிலையில் திருத்தங்களுடனான சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகள் பெறப்பட்டது.  

அதன்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 

ரணில் சஜித் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொய்யான செய்திகளை பரப்பும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து ரணில் சஜித் இணையவுள்ளதாக விளம்பரம் செய்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறானதொரு இணைவு ஒருபோதும் ஏற்படாது என பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்துவதாக  தெரிவித்தார்.

இவ்வாறான பிரசார நிறுவனங்களை ஊடக நிறுவனங்கள் என அழைக்க கூட தாம் ஆசைப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (11) மீண்டும் விவாதிக்கப்படவுள்ள வற் வரி சட்டமூலத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்க தீர்மானித்தமை அக்கட்சியின் அமைச்சர் பதவிகளை வகிக்கும் உறுப்பினர்களுக்கு சிக்கலாகியுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அரசாங்கம் கொண்டு வரும் சட்டமூலத்தை எதிர்க்க முடியாது எனவும் கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்பதை அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டமூலத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் உணவின் விலை தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

அதாவது மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர். 

முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

வெட் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அக்கட்சி இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வெட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த தேர்தலில் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளில் இருந்தும் பலர் தம்முடன் இணையப் போவதாக ரத்னபிரிய குறிப்பிடுகிறார்.

தொழிற்சங்கங்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் அது விளையாட்டு மைதானம் அல்ல என்றும், திவாலான நாடு மீண்டு வந்து கடனை செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அமுல்படுத்தப்படவுள்ள தபால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரத்னப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளாந்தம் தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு நாடு என்ற வகையில் பாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாகவும், சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் இத்தகைய பின்னணியில் மூழ்குவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அளுத்கடை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் தீ பரவியுள்ளது.

நேற்று (09) நள்ளிரவு தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரி வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து 3 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.

தீயினால் நீதிமன்றத்தின் சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd