அவசர அமைச்சரவை மாற்றம் இன்று காலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றாடல், சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்கள் தொடர்பில் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்னுடன் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெய்வேந்திர முனையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் இணைந்து மேற்கொண்ட ஆழ்கடல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (22) கொண்டுவரப்பட்டது. படகில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றபபட்டுள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
லெபனானில் கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் மாத்தறை பகுதியைச் சேர்ந்த பிரேமலதா என்ற 65 வயது மூதாட்டி என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் ராணி என அழைக்கப்படும் பெண்ணொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சபுகஸ்கந்த மாகொல தெற்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒன்றரை மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள், ஐநூறு கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் உள்ளிட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் வசம் இருந்து நம்பர் பிளேட் மாற்றப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருந்து தனி வேட்பாளரை முன்வைப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவளித்த போதிலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையின் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என அவர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் போது வாக்காளர் அடிப்படை தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய சிறு கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதுடன், கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகளின் ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து தனி வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு - பதுளை பிரதான வீதியில் இன்று (ஒக்டோபர் 21) மதியம் பல மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.
அதற்கமைய, தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பெரகலைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், மண் சரிவு காரணமாக அவசரமான சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிபுணத்துவம் பெற்ற பிரபல நடனக் கலைஞரான கலாசாமிரி ரஜினி செல்வநாயகம் காலமானார்.
ராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்த ரஜினி செல்வநாயகம் இறக்கும் போது 71 வயதாகும்.
ரஜினா செல்வநாயகம் கலா கீர்த்தி மற்றும் விஸ்வ கலா கீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவராவார்.
ராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
அவர் தனது வீட்டில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
இன்று (21) அமுல்படுத்தப்படவுள்ள 15 மணித்தியால நீர்வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (21) மாலை 5 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை 15 மணி நேரத்திற்கு இந்த நீர் விநியோகம் தடைப்படும்.
கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இது அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.