web log free
August 01, 2025
kumar

kumar

ஒரு பிள்ளையின் தாயான 19 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.  

10 வயதில் இருந்தே மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாகவும், வெளியில்  கூறினால் கொலை  செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எப்பாவல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரின் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறைத் தீர்ப்பதற்காகச் சென்று தந்தை மற்றும் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது கணவர் இடையில் இறங்கிய பின்  யாருமற்ற இடத்தில் வைத்து தந்தை மகளை மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

கடைசியாக நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், 10 வயதிலிருந்தே தனது தந்தை தன்னை அவ்வப்போது பலாத்காரம் செய்து வருவதாகவும், தான் எதிர்க்கும் ஒவ்வொரு முறையும் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் அப்பெண் அளித்த புகாரில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

சிறுவயதில் இருந்தே நடந்து வரும் இந்த செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இனியும் பொறுக்க முடியாத நிலையில் தாயாருக்கும், கணவருக்கும் தெரிவித்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பணியை முடித்துக் கொண்டு படைமுகாமிற்குச் சென்று கொண்டிருந்த புறக்கோட்டை காவல்துறையைச் சேர்ந்த இரு பெண் காவல்துறை அதிகாரிளிடம் பாலியல் சில்மிஷம் செய்ய முயன்ற நபர் ஒருவரை சுற்றியிருந்தவர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் பிடித்துள்ளனர்.

இரண்டு பொலிஸ் பெண்கள் மற்றும் குழுவினர் சந்தேகரை பொலிஸாரிடம் ஒப்படைத்த் அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

53 வயதுடைய நபர், நேற்று இரவு 7 மணியளவில், சீருடை அணிந்திருந்த இரு பொலிஸாரையும் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக, புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் சிசு மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அகுருவத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வரகாகொட சல்காஸ் மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வா தலைமையிலான குழுவினர் அங்கு திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வீட்டில் காணப்படாத நிலையில், அதன் பின்பகுதியிலும் அதனைச் சுற்றியிருந்த காடுகளிலும் முழுமையான தேடுதலின் போது சந்தேக நபர் சில வாழை மரங்களுக்கு பின்னால் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி அவரை துரத்திச் சென்று அவருடன் சண்டையிட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது சந்தேக நபர் பெரிய கத்தரிக்கோல் போன்ற கூரான ஆயுதத்தால் நிலையத் தளபதியை பல தடவைகள் தாக்க முற்பட்டபோதும், தோல்வியின் காரணமாக அவர் தனது மார்பில் பல தடவைகள் கத்தியால் குத்திக்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அகுருவத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதை விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதியுடன் 17 பேர் இந்தியாவின் புது டெல்லிக்கு சென்றனர்.

அவர்கள் அனைவருடனும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL196 இல் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார். 

நாட்டின் நிதி வங்குரோத்துக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விலகியுள்ளார்.

குழுவின் தலைவர் சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் இந்தக் குழு கூடியதுடன், உறுப்பினர் இராசமாணிக்கம் குழுவில் இருந்து விலகியுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலை ஏற்பட்ட போது நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவின் தலைவர் என்ற வகையில் இந்தக் குழுவின் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதால் இந்தக் குழுவில் இருந்து விலகவுள்ளதாக உறுப்பினர் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதிடம் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:-

அண்டை நாடுகள் உடனான கொள்கையில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. நாகையில் இருந்து இலங்கைக்கு படகு சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே வர்த்தகம் போன்றவற்றிற்கு புதிய கதவுகள் திறந்து உள்ளன.

மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும். தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகிறோம்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகான தொலைநோக்கு திட்ட ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசும்போது, நாகை- காங்கேசன் இடையிலான படகு சேவை, சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் என்றும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சியானது, அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் ரணில் நம்பிக்கை தெரிவித்தார்

கிழக்கில் மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உதவித் தொகை வழங்கி வைத்ததுடன், நந்தவனம் முதியோர் இல்லம், ADVRO முதியோர் இல்லம், கிழக்கு இஸ்லாமிய மாற்றுத்திறனாளிகள் இல்லம், முஸ்லிம் முதியோர் இல்லம் போன்றவற்றின் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவியும் வழங்கி வைத்தார். 

அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார். 

இன் பாகுபாடு இன்றி அனைத்து மக்களையும் அரவணைத்து செயற்படும் ஆளுநரின் சேவைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.  

அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது சிறிய மகளின் சடலங்கள் அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.

அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலீஸில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளாந்தக் கூலியாகப் பெறும் ஆயிரம் ரூபா சம்பளம் 2015ஆம் ஆண்டு கோரப்பட்ட சம்பளம் எனவும், அந்தச் சம்பளம் 08 வருடங்களின் பின்னர் கிடைப்பதனால்  தோட்டத்தொழிலாளர்கள் தற்போது பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அவர்களது சம்பளம் 3000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ.பிரேமரத்ன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

மேலும் தொழிலாளர் நல நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதியில் வைப்பு செய்யப்பட்ட பணத்தைப் பெற அரசு முயற்சிப்பதாகவும், அந்தப் பணம் தொழிலாளர்களுக்கே உரியது என்றும், மத்திய வங்கியின் ஆளுநருக்கோ, நாட்டை ஆட்சி செய்பவருக்கோ அல்ல என கூறினார். 

மேலும் அந்தத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் தற்போது திட்டங்களைத் தயாரித்து வருவதாகவும், வருங்கால வைப்பு நிதியிலோ அல்லது ஊழியர் நம்பிக்கை நிதியிலோ வைப்பு செய்யப்பட்ட பணத்தைப் பெற யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று சங்கத்தின் செயலாளர் கூறினார்.

இந்நாட்களில் பயனாளிகள் பிராந்திய செயலகத்திற்கு அழைக்கப்பட்டு வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கான கடிதங்கள் வழங்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

கோதுமை மா கம்பனிகள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நேற்று (20) பிற்பகல் வரை 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான கையொப்ப சேகரிப்பு நேற்று காலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றும் கையொப்பமிட சந்தர்ப்பம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd