web log free
July 31, 2025
kumar

kumar

2022ஆம் ஆண்டிற்கான இலங்கை காவல்துறையால் வெளியிடப்பட்ட வருடாந்த செயற்திறன் அறிக்கையின்படி, கடந்த வருடத்தில் (2022) தகாத உறவுகளினால் ஏற்பட்ட குடும்பச் சண்டைகள் தொடர்பான 9636 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

2021 ஆம் ஆண்டில், தகாத உறவுகள் காரணமாக 9250 தகராறுகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் தகாத உறவுகளால் ஏற்படும் குடும்ப தகராறுகளின் எண்ணிக்கை 4% அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022ஆம் ஆண்டில் குடும்பத் தகராறு தொடர்பாக 111709 வெவ்வேறு புகார்கள் பதிவாகியுள்ளன.

இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 06% அதிகரிப்பு என அறிக்கை கூறுகிறது.

2021 ஆம் ஆண்டில், குடும்பத் தகராறு தொடர்பாக 105469 வெவ்வேறு புகார்கள் பதிவாகியுள்ளன.

2021 மற்றும் 2022 ஆகிய இரு ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான குடும்ப தகராறுகள் தொடர்பான புகார்களும் அதிகரித்துள்ளன.

2022 ஆம் ஆண்டில், குடும்ப வன்முறை தொடர்பான குடும்ப தகராறுகள் தொடர்பாக 22358 புகார்கள் பதிவாகியுள்ளன.

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு லீட்டர் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 348 ரூபாவாகும். 

ஒரு லீட்டர் 95 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். 

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் டீசலின் விலை 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 306 ரூபாவாகும். 

மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 226 ரூபாவாகும்.

18 வயது சிறுவனின் ஆடைகளை கழற்றி முழு  நிர்வாணமாக்கி அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. 

களுத்துறை - புளத்சிங்கள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புளத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், மாலை நேர தனியார் வகுப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவதற்காக பஸ் தரிப்பிடத்தில் 0காத்திருந்துள்ளார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர், தான் பொலிஸ் அதிகாரி எனவும், விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளார்.

மோட்டார் சைக்கிளை இறப்பர் தோட்டத்துக்கு செலுத்தியுள்ளார். அங்கு சிறுவனை அச்சுறுத்தி ஆடைகளை கழற்றி, கைகளை கட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட  சிறுவன் தனக்கு நேர்ந்ததை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்ததன் பின்னர், பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக எழுந்துள்ள நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அந்த பாடசாலையில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கடந்த கொரோனா வைரஸால் உயிரிழந்ததால் அந்த பாடசாலையில் அவரது ஆவி உலவுவதாக வதந்தி பரவி வருகிறது.

அண்மையில் எடுக்கப்பட்ட படம் ஒன்றில் உயிரிழந்த மாணவியின் நிழல் காணப்படுவதாகவும் இப்பாடசாலையின் வலைப்பந்தாட்ட அணி வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மாணவர்களின் வருகையும் குறைந்துள்ளது. எனவே இவ்வாறான நிலையில் யாராவது தலையிட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தி பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி கற்பிப்பது பொருத்தமானது எனவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் நாளை செவ்வாய்க்கிழமை (02) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. 

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் கலையரசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் டெலோ கட்சி சார்பாக செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், விநோதரலிங்கம், புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி முடிவுக்கு வந்த நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தற்போது ஐநூறு ஆசிரியர்கள் சட்ட அங்கீகாரம் இன்றி வெளிநாடு சென்றுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகள் விடுப்பு எடுத்து வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வழங்கப்பட்ட சலுகையின் கீழ் விண்ணப்பித்தும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

அனுமதி கிடைக்காததால் வெளிநாடு செல்வதற்கு தேவையான மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு வெளிநாடு சென்றுள்ளனர்.

விடுமுறை எடுத்து வெளிநாடு செல்ல ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அநீதி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்லும் ஒவ்வொரு உத்தியோகத்தரும் இலங்கையின் வங்கி முறையின் ஊடாக தனது பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கணக்கிற்கு மாதாந்தம் பணத்தை செலுத்த வேண்டும். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹதகம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் வட கொழும்பு பேரவைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினரான கஹந்தகம, அண்மைக்காலம் வரை அந்த முன்னணியில் வலுவான செயற்பாட்டாளராக செயற்பட்டவர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோலையும், 61 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 50 வீதமான இலங்கை ஆட்டோ டீசலையும் போதியளவு கையிருப்பில் வைத்திருப்பதற்குத் தேவையான எரிபொருள் நேற்று (29) ஆர்டர் செய்யப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என அவர் கூறினார். 

கடந்த மாதம், இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் கீழ் எரிபொருள் இருப்புக்களை முறையாக பராமரிக்க தவறிய பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் தேவையான குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை பேணுவதற்கு தேவையான கட்டளைகளை வழங்குமாறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது. 

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வில்லியம் மற்றும் மேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, எதிர்வரும் ஆண்டுகளில் சீனாவில் கடற்படைத் தளத்தை நிர்மாணிக்கக்கூடிய நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளதாக பாங்காக் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுத்தில் சீனா ஏற்கனவே 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருப்பதன் காரணங்களுக்காக இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சிறந்த இடமாக இருக்கலாம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சீன மக்கள் விடுதலை இராணுவம் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஜுபோட்டியில் தற்போது ஒரே ஒரு கடற்படை தளத்தை மட்டுமே கொண்டுள்ளது, மேலும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளின் கடுமை காரணமாக, சீனாவும் அமெரிக்காவின் கடல்சார் சக்தியை பொருத்த முடிவு செய்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக இதுவரை செய்த மிகப் பெரிய முதலீட்டை சீனா மேற்கொண்டுள்ளதாகவும், கடலை சீனாவால் கட்டுப்படுத்த முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு சீனாவின் ஆதரவு, இலங்கையில் சீனாவின் பிரபலம் மற்றும் இலங்கையில் சீனாவின் முதலீடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கடற்படைத் தளம் அமைப்பதற்கு சீனா நடத்தும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாக அறிக்கை காட்டுகிறது.

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதி கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd