web log free
May 01, 2025
kumar

kumar

உலகின் ஏனைய நாடுகளின் தலைவர்களிடம் பேசும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாயில் பிட்டு காரணமாகவா ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன்  பேசவில்லை என்று கேட்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 10 சுயேச்சைக் கட்சிகளுக்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய, ரஷ்யா ஜனாதிபதி புட்டினுடன் பேச மறுப்பது நமது நாட்டுக்கு பாதகமான அரசியல் நிலையென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணத்தில் குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஆணைக்கோட்டையை சேர்ந்த மருத்துவ நிபுணர் சந்திரபோலிற்குச் சொந்தமான போக்குவரத்து நிறுவனம் இந்த குதிரை வண்டிச் சேவையை முன்னெடுத்துள்ளது. 

நாட்டில் காணப்படும் எரிபொருள் பற்றாக்குறைக்கு ஈடுகொடுக்கும் வகைகள் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

 

எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞன் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் - புத்தளம் வீதியில் பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை மோட்டார் சைக்கிளுக்கான எரிபொருள் வரிசையில் காத்திருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் வாகனங்கள் வரிசையாக நிற்பதால் மற்றுமொரு வாகனம் செல்வதற்கு போதிய இடமில்லாத இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்காக தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றுள்ளார்.

டீசல் மற்றும் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடத்தல்காரர்கள் இவ்வாறு அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்து வருவதுடன், எப்படியாவது தமது தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் மக்கள் அதிக விலை கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

பல்வேறு வாகனங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் வியாபாரமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.

ரஸ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் எரிபொருளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் ஒப்படைக்காமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை அஞ்சுவதாகவும் தெரிவித்த அவர், அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் செயற்பட்டால் மக்களின் சகிப்புத்தன்மை மிஞ்சும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மர கடத்தல் வியாபாரிகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கரடி கடித்த நிலையில் கடந்த 21ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டுக்குள் இருந்த கரடி ஒன்று திடீரென பொலிஸாரை தாக்கிய போது, ​​பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடி ஒளிந்து கொள்ள முற்பட்ட போது, ​​பொலிஸ் சார்ஜன்டை  கரடி கடித்துள்ளது.

ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் கரடி துரத்தப்பட்ட நிலையில் காயமடைந்த சார்ஜன்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்ய சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமையுடன் தன்னை தொடர்புபடுத்தி  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவே குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்ததாக தேரர் தெரிவித்தார். 

பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்திச் செல்லப்பட்டவர்கள் மீன்பிடி கப்பல் உரிமையாளர் மற்றும் மீனவர் என தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களில் ஒருவரது மனைவி கடந்த 20ஆம் திகதி தனது கணவர் வெள்ளை நிற வேனில் ஏறியதாகவும் அதன் பின்னர் எவ்வித தகவலும் இல்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தனது மகன் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக காணாமல் போன மற்றையவரின் தாய் தெரிவித்துள்ளார்.

பட்டகொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பெறுவதற்காக 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் சாரதி வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அஹங்கம, சங்கரத்ன மாவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய வீரப்புலி சுனில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐந்து நாட்களாக டீசலை எதிர்பார்த்து டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிப்பருக்குள் அவர் இறந்து கிடப்பதைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 439 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 20 எச்.ஐ.வி தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். 

இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 20 முதல் 49 வயது வரையிலானவர்கள். கடந்த காலங்களை விடவும் இளம் வயதினர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்து என டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துளார்.

இது ஓர் ஆபத்தான நிலை எனவும், கூடுதல் எண்ணிக்கையிலான தொற்றாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுகம் இல்லாதவர்களுடன் பாலுறவு கொள்ளும் போது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd