எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கம் 'தேசிய இனக்கப்பாட்டு அரசாங்கம்' என பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு உரிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததன் பின்னரே அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக இருப்பாரா அல்லது பதவி விலகுவாரா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க தயாராகி வருகிறார்.
அவரது முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தமையே இதற்குக் காரணம்.
அரசாங்கத்தில் புதிய அமைச்சரையும் நியமிக்கும். அந்தச் சூழ்நிலையில் பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ நீடிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது.
எவ்வாறாயினும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகள் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களிடம் முன்வைக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க பத்து நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பேட்டியளித்திருந்தார்.
ஆனால் நேரம் செல்லச் செல்ல சமூக வலைதளங்களில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதேநேரம், மே 03ஆம் திகதி உஷாராக இருக்குமாறு அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
2018 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிலுனர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர், 2018 ஆம் ஆண்டு தேசிய கல்வியற் கல்லூரியின் பயிற்சியை நிறைவு செய்துள்ள 4 ஆயிரத்து 643 ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், மே 4 ஆம் திகதி நியமன கடிதங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தனது கட்சி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை (காண்பிக்கும் ) நிரூபிக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"அடுத்த வாரம் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதை அனைவரும் பார்க்க முடியும், இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை நான் வெளிப்படுத்த மாட்டேன்," என்று அவர் தெரிவித்தார் மேலும் .
"ஜனாதிபதி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும், பின்னர் அரசாங்கத்தின் தூண்களில் சமநிலையை உறுதிப்படுத்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஏன் வித்தியாசமான பாதையில் செல்கிறார் என வினவியதற்கு, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை என வெல்கம தெரிவித்துள்ள போதிலும் அவர் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உடன் இருப்பதா.எவ்வாறாயினும் கடைசியில் அவர் ஐக்கிய மக்கள் சக்தி உடன் தான் வருவார் எனவும் தெரிவித்தார்
60 மருந்துகளின் விலை 40% அதிகரிப்பு 60 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை தற்போதைய விலையில் இருந்து 40% அதிகரித்து நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சரினால் அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாராசிட்டமால் மாத்திரைகள் (500மிகி ரூ.4.16), அசித்ரோமைசின் மாத்திரைகள் (250மிகி ரூ.88.91), ஆஸ்பிரின் மாத்திரைகள் (75மிகி ரூ.7.08), மெட்ஃபோர்மின் மாத்திரைகள் (500மிகி ரூ.9.34) போன்ற பொதுவான மருந்துகளின் விலை மற்றும் salbutamol காப்ஸ்யூல் (200mcg ரூ. 9.45) அதிகரிக்கப்பட்டுள்ளது
நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், தற்போது நாட்டின் விற்பனை வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிதியமைச்சர் அலி சப்ரி BBC க்கு கூறியுள்ளார்.
BBCக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், அலி சப்ரி, 2019 ஆம் ஆண்டில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விகிதத்தை 8% ஆக பாதியாகக் குறைத்தபோது அரசாங்கம் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தினசரி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த எட்டு மாதங்களில் தேசத்திற்கு $4bn (£3.2bn) தேவைப்படுகிறது. “வரிகளை அதிகரிக்க வேண்டும். எங்களிடம் உள்ள வருவாய் மற்றும் செலவின இடைவெளியைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும்,'' என்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு தற்போதைய VAT நிலை "நிச்சயமாக நிலையானது அல்ல" என்று கூறிய அவர், விகிதம் 13% அல்லது 14% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றார்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் 2019 இல் வரிகளை குறைக்கும் நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொண்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் நீண்ட நாள் காத்திருந்துள்ளதாகவும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்கத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தனக்கு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்துள்ளதாக இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
“நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு எனக்கு 24 மணி நேரமும் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாக ஒரு அழைப்பாளர் என்னிடம் கூறினார். எனக்கு எப்பொழுதும் பொது மக்களின் ஆதரவு இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என மீரிகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
"SJB யில் இருந்து யாரும் இடைக்கால அரசாங்கத்தில் சேர மாட்டார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
பிரிட்டனில் பாராளுமன்ற அலுவல்கள் நேரத்தில், 'மொபைல் போனில்' ஆபாச படம் பார்த்த அமைச்சர் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த 12 பெண் எம்.பி.,க்கள், அரசு தலைமை கொறடாவை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், பார்லி., அலுவல் நேரத்தில், அமைச்சர் ஒருவர் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்ற பழமைவாத கட்சியின் கொறடா கிறிஸ் ஹீடன் ஹாரிஸ், அவற்றை பார்லி., குறை தீர்ப்பு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
''இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஹீடன் ஹாரிஸ் உறுதி அளித்துள்ளார்.