ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபருக்கு வௌிநாட்டுப் பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.
பத்மே - "நான் இப்போ இருக்கற இடத்த சொல்லி நான்ஏன் சும்மா பருப்பு மட்டும் சாப்பிட? நான் என் குடும்பத்தோட 'குளிர் நாட்டில்' இருக்கேன். அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். பாதுகாப்புப் படையினரிடம் முடிந்தால் என்னைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்."
கேள்வி - "இந்த குற்றங்கள் எப்போது நிறுத்தப்படும்? ஏன் இப்படி சட்டத்தை உங்கள் கையில் எடுக்கிறீர்கள்?"
பத்மே - "என் அப்பா இறந்த அன்றே நான் சட்டத்தைக் கையில் எடுத்தேன். என் அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காகத்தான்."
கேள்வி - "கணேமுல்லா சஞ்சீவாவைக் கொல்ல 25 மில்லியன் செலவு செய்த்துள்ளீர்கள். எங்கிருந்து அவ்வளவு பணம் வந்தது?"
பத்மே - "25 கோடி. நானும் ஒரு பைத்தியக்காரன் அப்படிச் சொல்வதைப் பார்த்தேன். நான் இத்தாலியில் இருக்கிறேன் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் குற்றவாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். கணேமுல்லா சஞ்சீவா ஒரு தனி திருடன், அவன் எனக்கு ஒரு கதாபாத்திரம் அல்ல. அப்படிப்பட்ட ஒருவருக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அளவுக்கு நான் பைத்தியம் இல்லை."
கேள்வி - "இஷாரா செவ்வந்தி ..."
பத்மே எதுவும் கேட்காமல் பதில் சொன்னார்.
பத்மே - "அவர் இப்போது துபாயில் நன்றாக இருக்கிறார். விரைவில் அவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள்."
கேள்வி - "அது இன்னொரு கொலையா?"
பத்மே - "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
பதில் - "இல்லை, நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள்."
பத்மே - "நான் அப்பாவி மக்களை ஒருபோதும் பழிவாங்கவில்லை. என் தந்தையைக் கொன்றவர்களுடன் மட்டுமே நான் மோதினேன். நான் அவர்களை மட்டுமே கொன்றேன். இப்போது நான் என் பக்கம் இருக்கிறேன். ஆனால் யாராவது மீண்டும் என்னுடன் சண்டையிட வந்தால், நான் அங்கேயே உட்கார மாட்டேன். அதனால் என்னை என் பக்கம் இருக்க விடுங்கள்."
கேள்வி - "அப்போ சொல்லு, இஷாரா செவ்வந்தியை நீ என்ன செய்யப் போகிறாய்?"
பத்மே - "சில நாட்களில் பார்த்துக்கொள்ளலாம். இப்போ சொல்றது நல்லா இருக்காது. ஆனா அது குற்றமும் இல்ல."
இவ்வாறு கெஹல்பத்தர பத்மே தொலைபேசி உரையாடலில் தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, இன்று (14) துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 250,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.
இரண்டு பிணையாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.
சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமெனில், துப்பாக்கியுடன் அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவரது சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபரிடம் துப்பாக்கி இல்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபருக்கு எதிராக வழக்கைப் பராமரிக்க முடியாது என்று ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்த ஒருவர் என்று அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கூறுகிறார்.
வரலாறு ராஜித சேனாத்மாவை விடுதலை செய்யும் என்று கூறிய அவர், நீதிமன்றம் ராஜித சேனாரத்னவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது என்றும், கூறினார்.
மேலும், தனது தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ஏராளமானோர் சமர்ப்பிக்க உள்ளதாகவும், நாளைய தினத்திற்கு பிறகு அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், அபராதம் விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து நாளை முதல் தாமதமான நாட்களுக்கான அபராதம் அறவிடப்படும்.
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, 2025ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிவிப்புகளை மின்னணு சமர்ப்பிப்பு முறை நடைமுறைக்கு வரும் வரை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 ஆம் திகதிக்குள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் தங்கள் அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி காலகட்டத்தில் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதற்கான சலுகைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இன்னும் சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
அதன்படி, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி அந்த அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படும் என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில். இன்று (ஜூலை 14) காலையில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும்.
மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சரோஜாதேவி தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர்.
இவர் ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ள இவர், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
திரைப்படத்துறையினரால் 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரசுவதி' போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார்.
இவர் பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.
அதேபோல, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ்த் திரையில் 25 ஆண்டுகள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த
பி.சரோஜாதேவி சினிமாவில் நுழைந்ததே ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.
சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இவர்களுக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜாதேவி,
ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955ஆம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி.
படம் மிகப் பெரிய வெற்றி. அதற்குத் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழில் உடனடியாக நடிக்க முடியாதபடி கன்னடப் படங்கள் அவருக்குக் குவிந்தன.
‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. அதன் பின்னர் 2ஆவது கதாநாயகி வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.
அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘ரத்னா’வாக வந்து அலங்கரித்த சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனதிலும் ஊடுருவினார்.
எம்.ஜி.ஆருடன், 'நாடோடி மன்னன்' தொடங்கித் 'திருடாதே', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'படகோட்டி', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'பெற்றால்தான் பிள்ளையா', 'அன்பே வா' உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன.
சரோஜாதேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே 'கல்யாணப் பரிசு' என்ற திரைப்படத்தைக் கூறிவிடலாம்.
ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி.
சிவாஜி கணேசனுடன், 'பாகப்பிரிவினை', 'பாவமன்னிப்பு', 'பார்த்தால் பசி தீரும்' என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் இரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.
மாயையை உடைத்தவர்: படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர்.
சரோஜாதேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே.ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
திருமணம் செய்து கொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர்.
சரோஜா தேவி, எம்ஜிஆருடன் 26 படங்களிலும, சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது காவலில் உள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக பல தகவல்களை வெளிப்படுத்தி வருவதாக பிரதி அமைச்சர் பி. சரத் குமார குறிப்பிடுகிறார்.
தற்கொலை ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவர்கள் விரைவில் நாட்டிற்கு வெளிப்படுவார்கள் என்று பிரதி அமைச்சர் டி. பி. சரத் குமார குறிப்பிடுகிறார்.
பிரதி அமைச்சர் டி. பி. சரத் குமார கூறுகையில்,
"நாம் ஒரு கொலைகார சகாப்தத்தைக் கடந்துவிட்டோம். இந்த சகாப்தத்தின் புள்ளிவிவரங்களை இப்போது நாம் காண்கிறோம். சில குண்டுகள் ஆட்சியாளர்களின் அறிவோடு வெடிக்கப்பட்டுள்ளன. குண்டுகளை வெடித்த ஆட்சியாளர்கள் அங்கு சென்று வலி, கண்ணீர், அழுகையைப் பார்க்கிறார்கள்.
ஷானி அபேசேகர வந்தபோது, தவறு செய்தவர்கள்தான் பயத்தில் அதிகம் கத்தினர். சில நாட்களில் அறிக்கைகள் வெளியிடப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும், அவர்கள் அவ்வாறு செய்யும்போது, நம்மில் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயங்களைச் செய்த ஆட்சியாளர்களைப் பற்றிய துல்லியமான தகவல்களும் தரவுகளும் வெளியிடப்படும்.
பிள்ளையான்கள் மட்டுமல்ல, பிள்ளையானின் ஆதரவாளர்களும் பிடிபடுகிறார்கள். சில நாட்களில், ஈஸ்டர் தாக்குதல்களின் கொலையாளிகள் நாட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள். ஏற்கனவே வெளிநாட்டில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்."
பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதி அமைச்சர் டி.பி. சரத் குமார இதனைக் கூறுகிறார்.
இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கடந்த ஆட்சியை விட சிறந்தது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.
எசல பௌர்ணமி போயாவை முன்னிட்டு களனி பந்தல சந்தியில் நடைபெற்ற 20வது நியூ யுனைடெட் பிரண்ட்ஸ் கேலா ஃபாஸ்டா தன்சேலாவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:
"இந்த அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சில வேலைகளைச் செய்து வருகிறார். ஆனால் இதுவரை, பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுப்பதில் எதுவும் நியாயமான முறையில் வெற்றிபெறவில்லை. இப்போதெல்லாம், கொலைகள் முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் வணிகத்தின் மூலம் நிகழ்கின்றன. போதைப்பொருள் நமது சமூகத்திற்கு ஒரு பேரழிவாக மாறிவிட்டது. எனக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டாலும், நான் அதை ஏற்க மாட்டேன்.
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செயலாளர்கள் அங்கு இல்லை. செயலாளர்கள் அமைச்சகங்களில் தணிக்கை அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு ஃபீல்ட் மார்ஷல் என்பதால், அரசாங்க அமைப்பின்படி, அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் ஒரு ஃபீல்ட் மார்ஷல் நிறுத்தப்படுகிறார். இந்த வேலையைச் செய்பவர் யாராக இருந்தாலும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
நான் இந்த வேலையைச் செய்ய முடியாது. இந்த அரசாங்கம் இந்த நாட்டில் முந்தைய அரசாங்கத்தை விட சிறந்தது. எங்கள் சில பகுதிகளில் பின்னடைவுகள் உள்ளன. நாம் பசியால் வாட வேண்டியிருந்தாலும், திருட்டு, குண்டர், ஊழல் ஆகியவற்றை நிறுத்தினால், அது நாட்டிற்கு நல்லது. அரசாங்கம் தற்போது திருட்டு, மோசடி மற்றும் ஊழலைத் தடுக்க சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நமது நாட்டின் வளங்களை தவறாகப் பயன்படுத்தியவர்கள் சிறைக்குச் செல்வதை நாம் காண்கிறோம். இந்த அமைப்பு வெற்றி பெற்றால், அது நிச்சயமாக நாட்டிற்கு ஒரு பெரிய பலமாக இருக்கும். ஒரு கலாச்சாரமாக நாம் வெற்றி பெறுவோம். முதலில், திருடனைப் பிடிக்க வேண்டும். அது இல்லாமல், நீங்கள் செய்யும் எதுவும் மதிப்புக்குரியது அல்ல“ என்றும் அவர் கூறினார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மாநகராட்சியில் உள்ள முறைகேடுகள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் மயூரா நெத்திகுமார, இந்த சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய பகுதியாக பணியாளர்களில் குறிப்பிடத்தக்க குறைப்பு அடங்கும் என்று கூறினார்.
2012 முதல் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 ஊழியர்களின் பதவிகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், பணியாளர்கள் எண்ணிக்கை 2,031 "அத்தியாவசிய ஊழியர்களாக" குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மறுசீரமைப்பு நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் மனிதவள உத்தியை மறுவடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானிய (UK) அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளதா என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் இறுதியாக இந்தக் குழுவின் முன்னிலையில் 2024 நவம்பரில் தோன்றிய போது நான் தமிழ் மக்களிற்கான நீதி குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இந்த விடயம் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்காகவும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழ் சமூகத்திற்கு நீங்கள் வெளிப்படுத்திய ஆதரவிற்கும் எனது நன்றி என வெளிவிவகார அமைச்சர் டேவிட்லமியிடம் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு இது தொடர்பிலான எனது குடும்பத்தின் கதை தெரியும், இலங்கையில் மோதலின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மார்ச் மாதம் பிரித்தானிய தடைகளை அறிவித்தமை குறித்து நான் திருப்தி அடைகிறேன்.
சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக. இது அந்த சமூகத்திற்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கியமான விடயம்.
ஆனால் கவலை அளிக்கும் விதத்தில் கடந்த மாதம் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மற்றொரு மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த புதைகுழியில் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளை சர்வதேச தராதரத்தின் கீழ் அகழ்வு செய்வதற்கான போதிய வளங்கள் இலங்கையில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரித்தானிய ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) கேள்வி எழுப்பியுள்ளார்.