அமெரிக்கா விதித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் இலங்கையின் ஏற்றுமதியில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பியாங்க துனுசிங்க கூறுகிறார்.
வியட்நாம் போன்ற போட்டி விநியோகஸ்தர்களுக்கு குறைந்த கட்டண விகிதங்களை நியமிப்பதன் விளைவாகவும், அமெரிக்க சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதன் விளைவாகவும் ஏற்படும் பணவீக்க நிலைமை இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
"இந்த நிலைமை பல காரணிகளால் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
முதலாவது பிரச்சினை என்னவென்றால், இலங்கை போட்டியிடும் நாடுகள், எடுத்துக்காட்டாக தற்போது இலங்கையை விட குறைந்த வரிகளைக் கொண்ட வியட்நாம், அத்தகைய சூழ்நிலைக்கு உட்பட்டது, இது இலங்கைப் பொருட்களுக்கான தேவையைக் குறைக்கும்.
இரண்டாவது பிரச்சினை என்னவென்றால், இத்தகைய அதிக வரிகள் காரணமாக அமெரிக்க சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கிறது, இதன் விளைவாக நுகர்வோரின் வாங்கும் சக்தி குறையும் மந்தநிலை ஏற்படுகிறது.
இது இலங்கை நாடுகளில் பொருட்களுக்கான, குறிப்பாக ஆடைகளுக்கான தேவை குறைவதற்கும் காரணமாகிறது.
ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், எதிர்காலத்தில் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இது குறிக்கிறது."
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98 ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்று முன்தினம் அகழ்வின் போது 7 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14 ஆம் நாள் அகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
இலங்கையின் முதல்தர தன்னியக்க சுத்திகரிப்பு நிறப்பூச்சு கம்பெனியான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளவை சுபர்க்ரோஸ் 2025இற்கான பிரதான அனுசரனையாளர் எனும் அதன் வகிபாகத்தை அறிவிப்பதில் பெருமைக்கொள்கின்றது.
இந்நிகழ்வானது, உத்தியோகப்பூர்வமாக ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வே வளவை சுபர்க்ரோஸ் 2025 என மகுடமிடப்பட்டுள்ளமையானது, 2019 ஆம் ஆண்டிலிருந்தான 5வருட இடைவெளிக்குப் பின்னரான அதிமுக்கிய மோட்டார்பந்தய வர்த்தகநாமத்தின் மீள்வருகையை குறிப்பதுடன்- ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் இலங்கை மோட்டார் பந்தய சமுதாயத்திற்கு முக்கியமான கணமாகவும் விளங்குகின்றது.
இவ்வறிவித்தலானது இந்நிகழ்வின் உப-ஏற்பாட்டாளர்களான, இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியிலாளர்களினால் (SLEME) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டது.
செவனகலயின் கிராப்ட்ஸ்மேன் ஒட்டோட்ரோமில் ஜுலை 12மற்றும் 13 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள, வளவை சுபர்க்ரோஸின் 10வது பதிப்பானது புதுப்பிக்கப்பட்ட சக்தி மற்றும் உணர்வுகளுடன் மீளவருகின்றது. மோட்டார்கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் 21 போட்டி பிரிவுகளினை உள்ளடக்கியுள்ள, இந்நிகழ்வானது 50,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மயிர்கூச்செரியும் பந்தயங்களிற்கும் அப்பால், வளவை சுபர்க்ரோஸானது, இலங்கை சமுதாயத்துடனான அதனது ஆழமான பிணைப்பினை வெளிப்படுத்தும்விதமாக, .இராணுவ நலன்புரி மற்றும் சமுதாய செயற்றிட்டங்களுக்கான ஆதரவுடன், தொண்டு நோக்குடைய துவக்கமாகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் அதிகமாக கொண்டாடப்பட்ட மோட்டார் பந்தய வெற்றியாளர்களில் ஒருவரும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் வர்த்தகநாம தூதுவராக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக காணப்படுபவருமான, அஷான் சில்வா அவர்கள் வர்த்தகநாம தூதுவராக போட்டியாளர்கனை உற்சாகப்படுத்துவதற்காக இந்நிகழ்வில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. SL-GT
பந்தயத்திலான சில்வாவின் ஆகர்ஸமிக்க வரலாறுகளும் பல்வேறு வெற்றிக்கிண்ணங்களும் உற்பத்தியின் அதியுன்னதத்திற்கான நீண்டகால நோக்கம் மற்றும் தொழில்முனைப்பினை கட்டமைந்ததாக காணப்படுகின்றது.
ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே - இலங்கைக்கான தலைவர், திரு. வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள் கருத்துரைக்கையில், “வளவை சுபர்க்ரோஸ் உடனான எமது நீண்டகால பங்குடைமையானது பரஸ்பர மதிப்பு மற்றும் பகிரப்பட்ட பெறுதிகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பின், இலங்கையின் மோட்டார் பந்தயம் மற்றும் வாகன உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில், மீண்டும் பிரதான அனுசரனையாளராவதனில் நாம் பெருமையடைகின்றோம். இளைஞர் திறன்களிலான மூலோபாய கூட்டிணைவு மற்றும் முதலீடுகளின் வாயிலாக, இத்துறையினை உயர்த்துவதற்கும் தேசிய கட்டமைப்பிற்கு பங்களிப்பதற்கும் நாம் அர்ப்பணிப்புடையவர்களாக காணப்படுகின்றோம். இந்நிகழ்வின் வெற்றியினையும் வருகின்ற ஆண்டுகளிலும் நம்பிக்கைமிக்க இப்பங்குடைமையை தொடர்வதனையும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
இலங்கையின் தன்னியக்க சுத்திகரிப்பு துறையின் நம்பிக்கைமிகு பெயராக விளங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது, உலகத்தரம் வாய்ந்த நிறப்பூச்சுக்களின் வகைகளை வழங்கின்றது. வளவை சுபர்க்ரோசிலான இதனது ஈடுபாடானது மூலோபாயமானது என்பதுடன், உற்பத்திகளின் சிறப்பினை மாத்திரமின்றி உள்ளுர் வாகன உற்பத்தி துறையிலான அபிவிருத்திக்குமான அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கின்றது.
வாகன உதிரிபாக துறையில் திறனுடைய தொழிலாளர்களது அடுத்து தலைமுறையினை வளர்த்தெடுக்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபையுடனான வர்த்தக நாம பங்குடைமையானது, இத்துறை குறித்த இதனது அர்ப்பணிப்பிற்கான மற்றொரு உதாரணமாகும்.
வளவை சுபர்க்ரோஸ் 2025 ஆனது 30 உயர் பரிணாமமுடைய ஊஊவுஏ கமராக்கள், அலார்ம் முறைமைகள் மற்றும் மத்தியமயப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைந்த விரைவு-மீட்பு மார்சல்கள் உள்ளடங்கலாக, அதனது வரலாற்றிலேயே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உட்கட்டுமானத்தில் அதிநவீனமான அம்சங்களுடன் காணப்படுகின்றது.
இந்நடவடிக்கைகளானவை துல்லியம், தயார்ப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு எனும் - ஒவ்வொரு உற்பத்தி மற்றும் பங்குடைமையுடன் ஒன்றிணைந்த- ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயயின் சுயமதிப்புடன் மிகநெருக்கமாக இணைந்ததாக காணப்படுகின்றது.
வளவை சுபர்க்ரோஸ் 2025 வார இறுதியானது விறுவிறுப்பான பந்தயங்கள், பங்கேற்புடைய திருவிழா சூழல், மற்றும் செவனகலையிற்கு வேகம் மற்றும் சமுதாய உணர்வு என்பன மீளவரும் வரலாற்று நிகழ்வு என்பனவற்றை உறுதிப்படுத்துகின்றது. மோட்டார்பந்தய ஆர்வலர்கள்,. குடும்பங்கள், மற்றும் விறுவிறுப்பினை எதிர்ப்பார்ப்பவர்கள் என அனைவரையும் இலங்கை மோட்டார் பந்தயத்தின் ஆர்வமிகு இப்புதிய அத்தியாயத்தினை கண்டுகளிக்க அழைக்கின்றோம்.
நாட்டின் மிகவும் ஆபத்தான குற்றவாளியாகக் கருதப்படும் தற்போதைய பாதாள உலகத் தலைவரான கெஹல்பத்தர பத்மே, மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் ஹரக்கட்டாவின் மனைவியுடன் கைது செய்யப்பட்டதாகவும் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி மலேசியா வழியாக தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மலேசிய பொலிஸாரால் பிடிபட்டுள்ளனர் என மலேசிய செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய விசாரித்தபோது,கெஹல்பத்தர பத்மே மற்றும் மூன்று பேரை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால், பொலிஸார் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றும் இது தொடர்பாக மலேசிய பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள அளுத்கடே நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் உள்ள மூளையாக செயல்பட்டவர் கெஹல்பத்தர பத்மே என்று நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு கமாண்டோ சாலிந்த தலைமை தாங்கினார்,
மேலும், சாலிந்த என்ற பாதாள உலக தலைவர் பத்மேவின் கும்பலில் சித்தாந்தவாதியாகவும் நம்பப்படுவதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
பத்மேவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பாதாள உலகக் குண்டர்களில் சாலிந்தவும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கம்பஹா பாதாள உலகத்திற்காக கணேமுல்ல சஞ்சீவவிற்கும் கெஹெல்பத்தர பத்மேவிற்கும் இடையே நீண்டகால பகை இருந்தது.
இந்த மோதல்களில் இரு தரப்பிலிருந்தும் 20க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்களும் அவர்களது நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் பொலிஸார் அத்துமீறி நுழைந்து முன்னெடுத்த துப்புரவு செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ளது.
குறித்த காணியில் விகாரை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து, பாராளுமன்ற உறுப்பினர் இராதநாதன் அர்ச்சுணா இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவரித்தார்.
இதற்குப் பதில் வழங்கிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
“வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபருடன் நான் பேசி அதற்கான உத்தரவை வழங்கியுள்ளேன். அந்த வேலை இனி இடம்பெறாது” என குறப்பிட்டார்.
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இன்று(09) நுளம்பு ஒழிப்பு விசேட தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள், கல்வியியற் கல்லூரிகளிலும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை இன்று(09) காலை 08 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை கல்வி பணிப்பாளர் மற்றும் கல்வியமைச்சின் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட இணைப்பாளர் எஸ். எச். எச். சஞ்ஜீவனி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆசியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களிடையே இவற்றின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கான வழிக்காட்டல் கோவையொன்றும் வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் எஸ். எச். எச். சஞ்ஜீவனி குறிப்பிட்டார்.
கொழும்பு மேயருக்கு வாக்களித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார்.
1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐந்து வகுப்புகளில் இருந்த இந்திய விரிவாக்கக் கொள்கையை, 1976 ஆம் ஆண்டு தனது கட்சி உறுப்பினர்களுக்கு கல்வி வழங்குவதற்காக கட்சி கைவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் விவரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளதா என்றும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் அந்த ஒப்பந்தங்களின் நகல்களை அரசாங்கம் கோருகிறதா என்றும் டில்வின் சில்வா கேள்வி எழுப்புகிறார்.
ஒரு ஆன்லைன் சேனலுடனான கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நளீமின் இராஜினாமாவை அடுத்து கட்சி செயலாளரால் பெயரிடப்பட்ட அப்துல் வாஹித் சற்று முன் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்தார்.
ஐஜிபி தேசபந்து தென்னகோன் பதவியேற்ற பிறகு நாட்டில் பாதாள உலக நடவடிக்கைகள் மறைந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறுகிறார்.
தேசபந்து தென்னகோன் பாதாள உலகத்திற்கு எதிராக ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், அரசாங்கம் பாதாள உலகத்தை ஒடுக்க விசாரணைகள், கைதுகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
பாதாள உலகத்தை கட்டுப்படுத்தாவிட்டால், நாட்டின் வளர்ச்சி முயற்சிகள் தடைபடும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயங்குவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.