[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeவிளையாட்டு செய்திசேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஸ்பெயின்!

சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது ஸ்பெயின்!

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சேம்பியன் ஆர்ஜென்டினாவும், முன்னாள் சேம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின. 

4-வது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் ஆர்ஜென்டினாவும், 2-வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின. 

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. 

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. 

இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது. 

இதையடுத்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் (90+3) போது ஆர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். 

இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

தொடர்ந்து ஆட்டம் மேலும் 30 நிமிடங்களுக்கு சென்றது. மேலதிக நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். 

அதன் பிறகு ஆர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர். 

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

2010-ம் ஆண்டு முதல்முறையாக சேம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தற்போது 16 ஆண்டுகளுக்கு பின்னர் 2-வது உலகக் கிண்ணத்தை வென்று அசத்தியுள்ளது.

spot_img

Latest articles

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி...

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து...

More like this

வெண்கலப் பதக்கத்தை வென்றது இங்கிலாந்து அணி

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4...

ரோகித் சர்மா ஓய்வு?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா...

அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப் போட்டியில் மோதல்

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து...