பெல்லன்வில பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 55 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சூழ்நிலை மற்றும் அதனை மேற்கொண்டவர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



