Homeஉள்நாட்டு செய்திபெருவில் விமான விபத்து, 13 பேர் பலி

பெருவில் விமான விபத்து, 13 பேர் பலி

spot_img

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

செஸ்னா கரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், நேற்று (1) நாஸ்கா கோடுகள் தொல்பொருள் தளத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது. 

அதில் 11 சுற்றுலாப் பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளனர். 

விபத்தில் உயிரிழந்த பயணிகளில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர், ஸ்பெயினைச் சேர்ந்த இருவர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஏழு சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர். 

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

தெற்கு பெருவில் அமைந்துள்ள நாஸ்கா கோடுகள் என்பது பாலைவன மணலில் வரையப்பட்ட பழங்கால விலங்கு உருவங்களைக் கொண்ட, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமாகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 

இந்த வரைபடங்களின் முழுமையான அமைப்பைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சிறிய ரக விமானங்களில் பயணம் செய்வது வழக்கம். 

விபத்தின் தீவிரத் தன்மை காரணமாக எவரும் உயிர் தப்பவில்லை எனவும் இதுவரை நான்கு சடலங்களை மீட்டுள்ளதாகவும் பெரு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_img

Latest articles

அடுத்து கோட்டாதான்..!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள்...

இரத்மலானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில்...

மஹர சிறைச்சாலையில் பதற்றம்!

மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக பதற்றநிலை ஏற்பட்டது. இந்தச்...

நீர்கொழும்பு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

– மீனவர்களை மீட்க முப்படை கூட்டு நடவடிக்கை நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில்...

More like this