மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக பதற்றநிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சில கைதிகள் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக வந்திருந்த உறவினர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே காத்திருக்கின்றனர். அங்கு இருந்த சிலர், சிறைச்சாலைக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரப்பூர்வமான விரிவான அறிக்கையை வெளியிடவில்லை.




