Homeஉள்நாட்டு செய்திநீர்கொழும்பு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

நீர்கொழும்பு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

spot_img

– மீனவர்களை மீட்க முப்படை கூட்டு நடவடிக்கை

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.

மேலும், விபத்தில் சிக்கிய மீனவர்களைத் தேடும் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 412’ ரக ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற டிங்கி படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலமே முதன்முதலில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இச்சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மீன்பிடிக்கச் சென்ற மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது வரை, விபத்துக்குள்ளான ஒரு படகில் இருந்த மீனவர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் ஒதுங்கியுள்ள நிலையில், அதே படகில் பயணித்த மேலும் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, காணாமல் போன மீனவர்களையும் படகுகளையும் தேடுவதற்காகக் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விசேட மூழ்கிச் செல்லும் அணியினருடன் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், வான் மற்றும் கடற்படைப் பிரிவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_img

Latest articles

இரத்மலானை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில்...

மஹர சிறைச்சாலையில் பதற்றம்!

மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக பதற்றநிலை ஏற்பட்டது. இந்தச்...

கொழும்பு கடலில் விழுந்த 17 கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே 17 நௌட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்த வணிகக் கப்பலிலிருந்து 17 காலியான சரக்குக் கொள்கலன்கள்...

தங்கம் வென்ற தரங்க! ஜனாதிபதி வாழ்த்து!

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே...

More like this