இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் 92 மற்றும் பெட்ரோல் 95 விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை ரூ.15 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.414 ஆக இருந்த பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் புதிய விலை ரூ.399 ஆகும்.
அத்துடன், பெட்ரோல் 95 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை ரூ.20 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.495 ஆக இருந்த அதன் புதிய விலை ரூ.475 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், டீசல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய Ceypetco எரிபொருள் விலைகள்:
- லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் – ரூ.399 / லீற்றர்
- லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் – ரூ.475 / லீற்றர்
- லங்கா ஆட்டோ டீசல் – ரூ.382 / லீற்றர்
- லங்கா சுப்பர் டீசல் – ரூ.478 / லீற்றர்
- லங்கா மண்ணெண்ணெய் – ரூ.285 / லீற்றர்
இந்த புதிய விலைகள் நாடளாவிய ரீதியில் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.




