Homeஉள்நாட்டு செய்திபாரிய முறைகேட்டை மூடிமறைக்க ஜனாதிபதி செயலாளர் முயற்சி

பாரிய முறைகேட்டை மூடிமறைக்க ஜனாதிபதி செயலாளர் முயற்சி

spot_img

சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேட்டை மூடிமறைக்க தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத தெரண ‘360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப் பாகங்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கொள்கலனுக்கு தேவையான இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால், அது சுங்கத் திணைக்களத்தின் ‘Red Channel’ ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, முதலாவது குழுவினர் மேற்கொண்ட பரிசோதனையில் கொள்கலனில் எவ்வித குறைபாடுகளும் இல்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அப்போது சுங்கத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான இரண்டாவது குழுவினரால் குறித்த கொள்கலன் மீண்டும் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பரிசோதனையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏழு வாகன ஆசனங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி, அவற்றை அரசுடைமையாக்க பரிந்துரைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சுங்கத் திணைக்களத்தின் உள்நாட்டு விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது பரிசோதனையின்போது, சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்படாத 45 வகையான பொருட்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொருட்கள் அந்தக் கொள்கலனில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் 130 வாகன ஆசனங்களும், ரிம்களுடன் கூடிய பெருமளவிலான டயர்களும் இருந்ததாகவும் டி.வி. சானக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பாரிய முறைகேடு தொடர்பான அறிக்கைகள் தற்போது சுங்கத் திணைக்களத்திலும் நிதி அமைச்சிலும் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த அனைத்து ஆவணங்களின் பிரதிகளும் தம்மிடம் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கோ முறைப்பாடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல்படுத்துவதாகக் கூறினாலும், ஜனாதிபதியின் செயலாளர் போன்ற உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பான இவ்வாறான சம்பவங்களில் மௌனமான அணுகுமுறையைப் பின்பற்றுவது கவலைக்குரிய விடயம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

Latest articles

QR முறை தொடரும்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையானது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதா, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது...

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது!

– அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி...

எல் நினோ காரணமாக இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் அபாயம் – ஐ.நா.

புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையைப் பொறுத்தவரையில் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறே காணப்படுவதாக...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்

எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொதுஜன பெரமுனவின்...

More like this

QR முறை தொடரும்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையானது தொடர்ந்து நடைமுறையில் உள்ளதா, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது...

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது!

– அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி...

எல் நினோ காரணமாக இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் அபாயம் – ஐ.நா.

புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையைப் பொறுத்தவரையில் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறே காணப்படுவதாக...