தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இரண்டு வரவு–செலவுத் திட்டங்களின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை தலா 10,000 ரூபாயால் அதிகரித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் வரவு–செலவுத் திட்டத்திலும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்திலிருந்து விலகி, மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்துடன் தொடர்புடைய சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததன் காரணமாக, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் வலியுறுத்தியுள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.




