வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பகல் நேரங்களில் அதிகரிக்கும் வெப்பம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




