2026 ஆம் ஆண்டுக்குள் பல அதிவேகநெடுஞ்சாலைகளின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், குருநாகல்முதல் தம்புள்ளை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – கலேவெல பகுதிகளின் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர்தெரிவித்துள்ளார். மேலும், கஹதுடுவ முதல் இங்கிரியவரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளும் இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்டுநாயக்க முதல் சிலாபம் (ஹலாவத்த) வரையிலான அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான பணிகளுக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடவத்த முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளை 2028 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.




