Homeஉள்நாட்டு செய்திசமுர்த்தி திணைக்களத்தில் 6ஆண்டுகளில் ரூ.270 மில்லியன் நிதி மோசடி

சமுர்த்தி திணைக்களத்தில் 6ஆண்டுகளில் ரூ.270 மில்லியன் நிதி மோசடி

spot_img

– 181 சம்பவங்கள் பதிவு

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் கடந்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2020 முதல் 2025 வரை, மொத்தம் ரூ.270.47 மில்லியன் பெறுமதியான 181 நிதி மோசடி சம்பவங்கள்பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் 58 சம்பவங்கள் தொடர்பாக நிதி ஒழுங்குவிதி 104-ன் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர், ரூ.42.51 மில்லியன் தொகை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரூ.56.19 மில்லியன் பெறுமதியான 5 நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பான நடவடிக்கைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிதி முறைகேடுகள் 2014 ஜனவரி முதல் 2019 வரையான காலப்பகுதியில் சமுர்த்தி வங்கிகள் மற்றும்வங்கி சங்கங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமுர்த்தி வங்கி கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் ஒழுக்காற்று விதிகளின் கீழ் வழங்கப்படும்தண்டனைகள் போதுமான கடுமையுடன் இல்லாமை போன்ற காரணங்களால், அதிகாரிகள் தொடர்ச்சியாக நிதி மோசடிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வுஅறிக்கையின் ஊடாகவே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

spot_img

Latest articles

இன்றும் சில மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம்

மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை இன்று (13) “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடமத்திய...

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆய்வு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா...

பொய் முக சிம் அட்டைகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சிம் அட்டைகள் வழங்குவதுதொடர்பான...

More like this