மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை இன்று (13) “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.




