Homeஉள்நாட்டு செய்திபொய் முக சிம் அட்டைகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

பொய் முக சிம் அட்டைகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

spot_img

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சிம் அட்டைகள் வழங்குவதுதொடர்பான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி, புதிய ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப்பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதநடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள், குறிப்பாக பொலிஸார், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன்இணைந்து சிம் அட்டை வழங்கல் தொடர்பான விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறை அமுலுக்கு வந்த பின்னர், பெரும்பாலும் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய சிம் அட்டைபெறுபவர்கள் நேரடி புகைப்படத்துடன் (Live Photo) தங்களது சிம் அட்டையைப் பதிவு செய்ய வேண்டிய நிலைஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2027ஆம் ஆண்டில் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்து தொலைபேசி பாவனையாளர்களினதும் அடையாளத்தை 100% உறுதிப்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ தேவையற்ற சிரமம் ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், முக்கிய நோக்கம் நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள்பயன்படுத்தப்படுவதை குறைப்பதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுமார் 30 மில்லியன் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாகவும், தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்தே பொதுமக்களிடமிருந்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் பந்துல ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட சேவை வழங்குநர்களிடம்காணப்படும் தரவுகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும், அந்தத் தரவுகளை மேலும்துல்லியமாக சரிபார்ப்பதற்கான முழுமையான அமைப்பு தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

இன்றும் சில மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம்

மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை இன்று (13) “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடமத்திய...

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆய்வு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா...

செஸ் வரி நீக்கம் – புதிய சுங்க வரி அறிமுகம்

உள்நாட்டு தொழில்துறையினரை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குவிதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை (CESS) நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சுங்க வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும்...

More like this