Homeஉள்நாட்டு செய்தி2026ஆம் ஆண்டில் 120000 அதிகமானோர் அரச சேவைக்கு

2026ஆம் ஆண்டில் 120000 அதிகமானோர் அரச சேவைக்கு

spot_img

2026ஆம் ஆண்டில் அரச சேவைக்கு 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரை ஆட்சேர்ப்பு செய்யும் விரிவான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அரச துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டார்.

இதன் கீழ், சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சையில் சித்தியடையும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதுடன், ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்குத் தேவையான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 1,500-க்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கான பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுகாதாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அரச சேவையின் மேலும் பல துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் எதிர்காலத்தில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் சந்தன அபேரத்னவின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டில் பட்டதாரிகள் மற்றும் தகுதியுடைய ஏனைய இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட சுமார் 35,000 பேர் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான வேலைத்திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

Latest articles

இலங்கையில் A H1N1 தொற்று அதிகரிப்பு

இலங்கையில் இன்ஃப்ளூயன்சா A H1N1 தொற்றின் அண்மைக்கால அதிகரிப்பு பதிவாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) தேசிய...

நீதிமன்றங்களில் குவிந்துள்ள 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள்

ஓய்வு வயதைத் திருத்தி அனுபவமிக்க நிபுணர்களின் சேவையைப் பெற வேண்டும் – பிரதி அமைச்சர் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் தற்போது...

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு

ஏழு ஊழியர்கள் காயம் – இருவரின் நிலை கவலைக்கிடம் பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை...

சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா என்ற சந்தேகம்...

More like this