Homeஉள்நாட்டு செய்திபுதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளுக்கு விளக்கம்

புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளுக்கு விளக்கம்

spot_img

இசுருபாய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வளாகத்தில் புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் மாகாண மற்றும் வலய மட்ட கல்வி அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றது.

முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தொடர்பில் மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளை அறிவூட்டுவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தொடர்பான விரிவான தகவல்களும் இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னர், குறித்த தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு கல்வி அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைய, காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையான பாடசாலை நேரத்தில் ஒரு பாடவேளையை 40 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்துதல், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக முன்வைக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பீட்டு முறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள தொழிற்கல்விப் பாடங்கள் மற்றும் 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி, தொழில் வழிகாட்டல், வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட புதிய பாடத்துறைகள் தொடர்பிலும் அதிகாரிகள் தெளிவுபடுத்தப்பட்டனர்.

மேலும், 2027ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் பங்கேற்ற அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் மேற்கொள்ளப்படும் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உபகரண அபிவிருத்தித் திட்டங்கள், மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சிகள், கற்றல் தொகுதிகளைத் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விளக்கங்கள் வழங்கப்பட்டன.

spot_img

Latest articles

1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் ஒக்டோபர் 8ஆம் திகதி

ஒக்டோபர் 8ஆம் திகதி 1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்...

2030ஆம் ஆண்டுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க திட்டம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம், படிப்படியாக மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என எரிசக்தி...

யோஷித ராஜபக்ஷ மற்றும் டேசி ஃபோரஸ்ட் மீதான வழக்கு நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேசி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

இந்த ஆண்டு 7,647 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7,647 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார...

More like this